இந்தப் படத்தின் தலைப்பு மூன்றாம் பிறை அருமையான ஒரு குறியீடு போன்ற சிறப்பான தலைப்பு.
A symbolic title.
மூன்றாம் பிறை என்பது மூன்றாம் நாள் தெரியக்கூடிய நிலவைக் குறிக்கிறது.
புது நிலவு நாள் (No moon day)என்பது நிலவு வெறும் வெறும் கண்ணுக்குத் தெரியாத முதல் நாள் (அதாவது அமாவாசை ). ஒளி குறைந்த நாளும் கூட.
சந்திரனும் சூரியனும் ஒரே longitude ல் வரும் நாளில் சந்திரன் கண்ணுக்கு தெரிவதில்லை. சூரியனின் ஒளி அதன் பின்புறத்தில் தெரிவதால் பூமியிலிருந்து பார்க்கும் போது முகப்பு இருள் அடைந்து தெரியும்.
இருள் சூழ்ந்த இந்த நிலையில் எப்போதுமே வளரும் புது நிலவை எதிர்பார்த்து காத்திருக்கும் நாளாக அமைகிறது.
இதில் உள்ள சென்டிமென்ட் என்னவென்றால் இந்த நாள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
சந்திரன் மனோகாரகன் என்பது இந்துக்களின் ஆருட ரீதியான நம்பிக்கை . (எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகும் போது மனக்குழப்பம் ஏற்படும் என்பதெல்லாம ஜோதிட ரீதியான கணிப்பு)
உலகெங்கிலும் மக்கள் நிலவு குறித்த பல்வேறு நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.
அதிலும் முக்கியமாக சந்திரன் மனோகாரகன் என்ற நம்பிக்கை உலகெங்கும் பரவலாக உள்ளது என்றே கூற வேண்டும். அம்மாவாசை பௌர்ணமி நாட்களில் கடல் கூட பேரலைகளைக் கொண்டு அமைதி இன்றி இருக்கும். மனித மனநிலையும் பலவீனமானால் அலைபாயும் என்பதுண்டு.
Touched by the moon என்ற சொல்லாடல் ஆங்கில இலக்கியங்களில் அடிக்கடி வரும்.அப்படி என்றால் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று அர்த்தம். பெரும்பாலும் காதலர்களை அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம். கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்படும் காரணத்தால் அவன் காதலில் விழுந்தான் என்று சொல்வதை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.
Lunatic என்ற வார்த்தையின் பொருள் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த வார்த்தை Lunar என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.
மூன்றாம் பிறை
திரைப்படத்தைப்பொறுத்தவரை கதாநாயகியின் வாழ்க்கையில் இருள் சூழ்கிறது. எதிர்பாராதவிதமாக மனநிலை பாதிக்கப்படுவதால் ஒரு சிறு குழந்தையைப் போன்ற நிலைமைக்குத் தள்ளப்படுவார். தன் பெயரைத் தவிர வேறு எல்லாவற்றையும் மறந்து ஒரு சிறு குழந்தையைப் போல் நடந்து கொள்வார்.
மூன்றாம் பிறை என்ற தலைப்பு இந்த மனப்பக்குவம் அடையாத ஒரு சிறு குழந்தையாக மாறிவிட்ட இளம் பெண்ணுக்கும் அவளுடைய நிலைமைக்கும் மிகவும் பொருத்தமானது. மூன்றாம் நாள் மெல்லிய கீற்று போல ஒளிரும் பிறை போல சிறு குழந்தையாய் அந்த இளம் பெண் நடந்து கொள்வாள்.
ஒரு வளர்பிறை போலவே மீண்டும் அவள் பூரண மனநலம் பெற்று ஒருமுழு நிலவு போல முந்தைய நிலைக்குத் திரும்பி வருவாள். மனநிலை பாதிக்கப்பட்டு சிறு குழந்தையாய் இருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை முற்றிலும் மறந்து தனது வளர்பிறை நாட்களைக் கடந்து விட்டிருப்பாள். இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் அவள் தெளிவாக இருப்பாள்.
அவளை நேசித்தவன் கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்டவன் போல நடந்து கொள்வதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். உண்மையில் அவனது மனநிலை அவளது இந்த மாற்றத்தால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் தனது 17 வயது மனைவியின் தற்கொலையால் பாதிக்கப்பட்டவர். அவளின் நினைவாக இந்த படம் இயக்கப்பட்டதாக கூறியிருந்தார்