பெண்களுக்கு ஏற்கனவே இருந்த முன்னுரிமை தான் 30 %. அது இப்போது 40 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்டவர்களுக்கு எத்தனை விழுக்காடு என்பதை எப்படி பொருள் கொள்ள வேண்டும் .
Gender equality அல்லது ஒடுக்கப்பட்டவர்களுக்கான சம உரிமை இதன் மூலம் நிலைநாட்டப்படுவது எப்படி என்று பார்க்கலாம்.
இப்போது அந்த 40 விழுக்காடு
(எடுத்துக்காட்டாக 40 காலி இடங்கள் என்று வைத்துக்கொள்வோம்)பெண்களுக்கே போய்விட்டால் மீதமுள்ள 60 காலியிடங்களுக்கு மட்டுமே ஆண்கள் போட்டியிட முடியும்.
ஆனால் பெண்கள் அந்த நூறு இடங்களுக்கும் போட்டியிடலாம். 40 இடங்கள் சிறப்பாக அவர்களுக்கு மட்டுமே. மீதமுள்ள 60 இடங்களுக்கு அவர்கள் ஆண்களோடு போட்டியிட வேண்டும். Merit will be the criterion in that.
"""""""""""""""""""”"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இப்போது பொதுவாக ரிசர்வேஷன் பாலிசி என்பதைப்பற்றி கூற வேண்டிய அவசியம் வருகிறது.
இதுவே Reservation policy.( பொதுவாகவே இட ஒதுக்கீடு என்பது இப்படித்தான் பின்பற்றப்படுகிறது)
(60% என்பது இட ஒதுக்கீட்டுக்கான இந்திய சட்டத்தில் உச்சவரம்பு 50% மட்டுமே சாதி அடிப்படையில் ஆனது)
எடுத்துக்காட்டாக மலைவாழ் மக்களுக்கான (ST) இட ஒதுக்கீடு அவர்கள் பொது (General category)என்ற வகையிலும் போட்டியிடுவதைத் தடுக்காது. அதேசமயம் அவர்களுக்கான அந்த ஒதுக்கப்பட்ட காலியிடங்களை வேறுயாரும் பெற முடியாது.
போட்டியிடுவதற்கு விண்ணப்பங்களே பட்டியலின மலைவாழ் மக்களிடம்(ST) இருந்து இருந்து வரவில்லை என்றால் அந்த காலி இடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டு நிரப்பப்படாத முன்பதிவு காலியிடங்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னெடுக்கப்படும்.
3 வருடங்களுக்குப் பிறகும் முதல் ஆண்டு நிரப்பப்படாத காலியிடங்கள் இருந்தால், அந்த நிரப்பப்படாத காலியிடங்கள் 4 வது ஆண்டில் பேக்லாக்(Backlog vacancies) காலியிடங்களாக மாறும், மேலும் இதுபோன்ற பேக்லாக் காலியிடங்களை நிரப்புவதற்கான கூடுதல் தளர்வுடன் ஸ்பெஷல் டிரைவ் அறிவிக்கப்படும்.
ஒரு பிரிவில் நிரப்பப்படாத காலியிடங்கள் ஒரே வகையால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். மற்ற பிரிவுகளில் காலியிடங்களை சேர்க்க முடியாது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களுக்கான சம உரிமை வேண்டி இந்த இட ஒதுக்கீடு கொள்கை ECONOMICALLY WEAKER SECTIONS) வரையறுக்கப்பட்டிருக்கிறது. EWS என்ற அந்த கடைசி category.(2019 ல் மசோதா 103வது சட்டத்திருத்தம் நிறைவேற்றம்).
அவ்வாறு நலிவடைந்தவர்கள் யார் என்பதை மத்திய அரசு தீர்மானிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதனை மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தவிர இந்த நலிவடைந்த மக்கள் யார் என்பதில் தான் இப்போது பெண்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எவ்வளவு விழுக்காடு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமாக அரசு பணிகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களில் எவ்வளவு பேர் பெண்கள் எவ்வளவு ஆண்கள் என்று கணக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு 2017–2018 வரையிலான கணக்கின் படி
8.8 இலட்ச அரசு ஊழியர்களில் 2.92 இலட்சம் மட்டுமே பெண்கள். அதாவது 33% மட்டுமே பெண் ஊழியர்கள். (67% ஆண்கள்)
பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப் பட்டால் அவர்கள் பணிக்கு வருவது அதிகமாகும். பொதுவில் ஆண்களுடன் போட்டியிட்டு வருவது என்பது எளிதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியமாகிறது.
எனவே ஏற்கனவே இருந்த 30 விழுக்காடு இடங்கள் இப்போது 40 விழுக்காடு என்று அறிவிக்கப்பட்டு இந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தெலுங்கானாவில் 33.3விழுக்காடு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இப்போது தமிழ்நாட்டில் 40 விழுக்காடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் SC, ST, மற்றும் OBC வகைகளை சேர்ந்தவர்களுக்கான காலியிடங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை.(Reservation)
அதேபோல் பொது என்ற category யிலும் அந்த 40 விழுக்காடு தொடர்ந்து காலியிடங்கள் அறிவிக்கப்படும்.
எப்போதுமே பலரின் சந்தேகம் என்னவென்றால் அனைத்து எஸ்சி எஸ்டி ஓபிசி மற்றும் பொது வகைகளிலும் பெண்கள் உள்ளனர். எனவே பெண்கள் அந்தந்த ரிசர்வேஷன் ல் போட்டியிடும் போது பெண்களுக்கு தனியாக ரிசர்வேஷன் ஏன் என்று கேட்டார்கள் இப்போது அதனை ஏன் உயர்த்த வேண்டும் என்று கேட்கிறார்கள்.
சாதி அடிப்படையில் பட்டியலின, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுத்தது போக அனைத்துபெண்களுக்கும் கொடுத்துவிட்டால் பிற ஆண்களுக்குரிய வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒட்டுமொத்த ரிசர்வேஷன் 60% போக மீதமுள்ள அந்த 40 விழுக்காடு பொது .. அதில் merit அடிப்படையில்தான் பணியிடங்கள் காலி இடங்கள் கல்வி வேலைவாய்ப்பு அனைத்தும் வழங்கப்படும். அதன் கீழ், கல்வி வயது தகுதியுள்ள எல்லோரும்போட்டியிடலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த பாதிப்பும் இல்லை.
இந்த ரிசர்வேஷன் பாலிசி யிலேயே எப்போதுமே சில குறைபாடுகள்(anamolies) உண்டு. அவற்றை அவ்வப்போது ஆராய்ந்து தீர்க்க முயற்சிகள் எப்போதுமே நடந்து வந்திருக்கின்றன.
யாருக்கு முன்னுரிமை எந்த வரிசையில் என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது முதலில் பெண்கள் பிறகு தாழ்த்தப்பட்ட பெண்கள் பிறகு தாழ்த்தப்பட்ட ஆண்கள். பிறகு பிற்படுத்தப்பட்ட பெண்கள் பிறகு பிற்படுத்தப்பட்ட ஆண்கள் அதன்பிறகு பொது என்ற அடிப்படையில் வரும் பெண்கள் கடைசியில் மீதம் உள்ள ஆண்கள் என்று எடுத்துக் கொள்வதா என்ற கேள்விகள் எல்லாம் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் விடை காண வேண்டுமென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதில் அரசு வேலையில், கல்வி இருக்கைகளில் ஏற்கனவே உள்ளவர்களின் கணக்கெடுப்பு இவற்றின் நிலவரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையிலேயே ரிசர்வேஷன் பாலிசி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில மாற்றங்கள் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன.
சம உரிமை என்பது எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே அரசியலமைப்பின் (constitution)அடிப்படை.
அவ்வாறு தான் பெண்களின் முன்னேற்றம் கருதி முப்பதிலிருந்து நாற்பது ஆக பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை( கல்வி மற்றும் வேலைவாய்ப்பு)கொடுக்கும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அடிக்குறிப்புகள்