விபத்து செய்தி கேட்டு அரசியல் தலைவர்கள் கட்சி தலைவர்கள் அரசு பொறுப்பில் இருப்பவர்கள் எல்லோரும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் வேலைகளையும் முடிக்குமாறு உத்தரவிட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு அறிவித்து விட்டார்கள். மனிதாபிமான நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான மக்கள் ஊர் சேர்ந்து விட்டனர்.
இனி அடுத்தது என்ன ?
அரசியல் தலைவர்களுக்கு எத்தனையோ கடமைகள் காத்திருக்கின்றன அவர்கள் அதில் கவனம் செலுத்த போய்விடுவார்கள்
சில நாட்களுக்கு இதை மற்றவர்கள் அரசியல் ஆக்குவார்கள்.
மேலும் சில நாட்களுக்கு இதை நினைவில் வைத்திருப்போம்.பிறகு எல்லாவற்றையும் மறந்து விடுவோம். அப்படித்தானே?
இதுபோன்ற நிலைமை இனி வராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்
தொழில்நுட்ப கோளாறா மனித தவறா என்று பட்டிமன்றம் நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள் பொறுப்பில் இருப்பவர்கள்.
தொழில்நுட்பமே அங்கு பயன்படுத்தப்படவில்லை என்பது கொடுமை.
ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் இதற்கு விடை கூறியே ஆக வேண்டும்.
ரயில்வே துறை இதை ஒரு சவாலாக ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்த முன் வர வேண்டும்.
மனித தவறு என்றால் அது மன்னிக்க முடியாத தவறும் கூட.
ஊழியர்களுக்கு சரியான பயிற்சி முறை அறிவுறுத்தல் வழிகாட்டுதல் இவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதவி விலகக் கூடாது தொடர்ந்து அதிக கவனத்துடன் பணியாற்றி தங்களை நிரூபிக்க வேண்டும்.
தண்டனை கொடுப்பதால் எதுவும் மாறப் போவதில்லை.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராக்கெட் விடும் நாம் ரயில் விடுவதில் கோட்டை விடலாமா?
வளர்ந்த நாடுகளின் முன் நாம் தலைகுனிவதா?
ரயில்வே துறையில் இருந்து பத்து லட்சம் மாநில அரசு 5 லட்சம் மத்திய அரசு ஒரு லட்சம் என்று இழப்பீடு கொடுத்தால் போதாது. இதை வைத்து பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து மீளலாம். இழந்தவர்கள் துயரத்தை காலப்போக்கில் மறக்கலாம்.
இனிவரும் காலம் பாதுகாப்பானதாக இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்ய வேண்டுமே தவிர இதை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சி செய்யாமல் நம் மக்கள் இருப்பார்களா?