ஞாயிறு, 7 மே, 2023

விடுதலை-1 படத்தில் ஒரு பெண்கள் கூட்டத்தையே காவலர்கள் மானபங்க படுத்துவது போல் எடுத்திருக்கிறார்களே இது நியாயமா? கற்பனைக்கு கூட இவ்வாறு எல்லாம் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லையே, சென்சார் இதை எப்படி அனுமதித்தது?

இந்த படத்தில் 1980களில் கதை ஆரம்பித்து கூறப்பட்டிருக்கும். 1987-ல் நடந்த சம்பவமாக கதை செல்லும். அதன்பின் இரண்டு வருடங்களில் இந்த சம்பவத்தை விவரிப்பதாக கூறுகிறார்கள்.

அன்றும் இன்றும் 

குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் காவல்துறையினரின் கை ஓங்கி இருந்தது. வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு காவல் துறையை சார்ந்த பல நபர்கள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்தார்கள்.
படத்தில் கூறப்பட்டது போல எண்பதுகளில் என்று திட்டவட்டமாக கூற முடியாது. படத்தில் காலகட்டம் உள்ளிட்ட எல்லாமே கற்பனை என்று கூறியிருக்கிறார்கள். எனவே அந்த எண்பதுகள் தான் அந்த காலகட்டம் என்று சொல்ல முடியாது. உண்மையில் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தை நினைவு படுத்தியது அந்த குண்டு வைத்து ரயிலை கவிழ்த்த நிகழ்வு. எத்தனையோ புதினங்கள் எழுதப்பட்டன விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் போன்ற விடுதலை வீரன் கதாபாத்திரங்கள் நெஞ்சை விட்டு நீங்காத ரயில் தகர்ப்பு சம்பவங்கள். இந்த விடுதலை திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது விஜய் சேதுபதி அந்த விடுதலை வீரனாக காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே சுதந்திர போராட்ட காலம் துவங்கி இது போன்ற காவல்துறை அரங்கேற்றும் கொடுமைகள் எந்த காலத்திலும் நடந்து வந்திருக்கின்றன.
1994 இல் பத்மினி என்ற பெண் கணவனுக்கு நீதி கேட்டு சென்றபோது காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சம்பந்தப்பட்ட 16 காவல் அதிகாரிகள் நீண்ட நாள் வழக்கிற்கு பிறகு கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார்கள்.
மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து நீதி கேட்ட ஒரு போராட்டம் அது.(அப்போது கற்பழிப்பு என்ற சொல் பயன்பாட்டில் இருந்தது. பாலியல் வன்கொடுமை என்று கூட வர்ணிக்கப்படவில்லை.)
காவல்துறையின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காலம் இருந்தது. உண்மையில் பத்மினியின் வழக்கிற்குப் பிறகு சட்டத்துறையில் தமிழகத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. பெண்களை விசாரணைக்காக ஆண் காவலர்கள் அழைத்துச் செல்ல முடியாது. மாலை நேரத்திற்கு பிறகு அவர்களை குடும்பத்தினர் இல்லாமல் தனியாக அழைத்துச் செல்ல முடியாது என்பது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆண்களுக்கும் கொடுமைகள் நிகழ்ந்தன.2020 களிலும் லாக் டவுன் காலத்தில் நிகழ்ந்த துயர சம்பவமான ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை யாரும் மறந்திருக்க முடியாது நிலுவையில் இருக்கும் பல் பிடுங்கப்பட்ட வழக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை 1
படத்தில் காட்டப்பட்டிருப்பது எந்த முன்னேற்றமும் அடையாத வளர்ச்சி என்பதே இல்லாத சில மலைவாழ் மக்களின் கிராமங்கள். இங்கு சிறப்பு முகாம்கள் அமைத்து காவல்துறை தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது கதையின் அடிப்படை. காவல்துறையினரின் சிரமங்களையும் இதில் உண்ணும் உணவு முதல் படுக்கும் இடம் வரை எந்த வசதியும் இல்லாமல் காவல்துறையினர் ஆபத்தான மலைப் பகுதிகளில் கடுமையான வாழ்க்கை வாழ்கிறார்கள்.அவர்கள் அதை எப்படி கையாண்டார்கள் என்பது கூறப்பட்டிருக்கிறது. வெறி கொண்டு அப்பாவி மக்களின் மீது ஆண் பெண் பேதமின்றி அனைவர் மீதும் வன்முறையை ஏவினார்கள்.
சாதாரணமாகவே காவல் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டார்கள் இதுபோல் சிறப்பு முகாம் என்றால் கேட்கவா வேண்டும்.
எளிதில் குற்றங்களை மேலதிகாரிகளிடமிருந்து மறைத்து விடலாம். படிப்பறிவில்லாத மக்களை எளிதில் ஏமாற்றலாம் கேள்வி கேட்க யாரும் இல்லை. சட்டங்கள் நியாயதர்மங்கள் பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை. எனவே காவல்துறை வெறித்தனமாக செயல்பட்டார்கள் என்பது பின்னணி .

சில காட்சிகளை இவ்வளவு நேரம் காட்டப்படுவதை தவிர்த்து இருக்கலாம். ஒரு குறிப்பு போல காட்டி இருக்கலாம். தேவையான காட்சிகள் மட்டும் அப்படியே காட்டுவதில் தவறில்லை. தேவைக்கு அதிகமான காட்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுதான் சென்சார் போர்டின் வேலை. தேவைக்கு அதிகமாக உயிருக்கு அஞ்சி கதாநாயகி உட்பட்ட பெண்கள் ஆடை களைய முற்படுவதை மட்டும் காட்டியிருந்தால் பரவாயில்லை அதன் பிறகும் அவர்களை ஓட விடுவது அதற்கு மேலும் அவர்களை நிற்க வைத்து அவர்களை  என்னதான் காவல் துறையை சேர்ந்தவனாக இருந்தாலும் கதாநாயகன் பார்வையிடுவதாக காட்டுவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை.

சிபிஎஃப்சி எனப்படும் சென்சார் அமைப்பு -

சென்சார் அமைப்பு இப்போது எப்படி செயல்படுகிறார்கள்? ஒரு விமர்சனம் அளிப்பது போல, படத்தில் வன்முறை இருக்கிறது மொழி மோசமாக இருக்கிறது என்று மட்டும் சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள். அத்தோடு அவர்கள் வேலை முடிந்து விடாது . ஒருவேளை அவர்கள் இந்த காட்சியை வெட்டுங்கள் அந்தக் காட்சியை குறையுங்கள் என்று கூறினால் திரைப்பட சான்றிதழ் பெறுவதற்கான applete tribunal கு அப்பீல் செய்து அந்த காட்சியை இணைத்து விடுவார்கள் பட தயாரிப்பாளர்கள். அன்று பத்மாவத் திரைப்படம் ஒரே ஒரு காட்சியை விட்டுவிட்டு பெயரை மாற்றி ஒரு சிறு எழுத்தை மட்டும் எடுத்துவிட்டு படத்தை வெளியிட்டது. இன்று கேரளா ஸ்டோரி படம் சில மாநிலங்களில் மட்டும் தடை செய்யப்பட்டு பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தடையும் விலகி விடக்கூடும். 

கள்ள நோட்டு அச்சடிப்பதாக காட்டும் திரைப்படத்தில் கூட அந்த இளைஞர்கள் இயல்பாக பேசும் வார்த்தைகள் சற்று அதிர்ச்சி அளிப்பதாகத்தான் உள்ளன.
ஆனால் இன்று குழந்தைகளும் இணையத்தில் எல்லாவிதமான காட்சிகளையும் பார்த்து பழகி தெரிந்து கொண்டார்கள். காலத்தின் கட்டாயம்.
கலாச்சார ரீதியாக அதிர்ச்சி அளிக்கும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மாற்றம் இல்லாவிட்டால் தமிழ் திரைப்படங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டும் அயல் நாட்டுப் படங்களையே பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். உலகமயமாக்கலின் தாக்கம் எல்லா துறைகளிலும் அனைத்து நாடுகளிலும் உள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் லிபரலிசம் வலியுறுத்தப்பட்டு சென்சார் போர்டு செயல்பாடுகள் அவ்வப்போது மாற்றியமைக்கபடுகின்றன.

CBFC சரிவர செயல்பட்டால் ,மக்களுடைய உணர்வுகளை எதிர்மறையாக தாக்கக்கூடிய எந்த காட்சியும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. படத்திற்கு தேவை என்றாலும் அதற்கான  வரம்புகளுக்கு உட்பட்டு தான் காட்சிகள் இடம் பெற முடியும்.
ஒரே நேரத்தில் பல மொழிகளில் படங்கள் ஒரே நாளில் வெளியிடப்படுகின்றன. எனவே நடைமுறை சிக்கல் காரணமாக சில காட்சிகளுடன் சில படங்கள் வெளியிடப்பட்டு விட்டன.
இனிமேல் இவற்றை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. மத்திய அரசு இந்தியாவில் போட்டி வெளியிடப்படும் அனைத்து படங்களுக்கும் கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இனிமேல் ஆபாசக் காட்சிகளும் வசனங்களும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.



கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...