வியாழன், 9 மார்ச், 2023

"ஒத்த செருப்பு" தமிழ் திரைப்படமும் "அலோன்" மலையாளத் திரைப்படமும் ஒரு ஒப்பீடு.

 தென்னிந்திய திரைப்படங்கள் மாறுபட்ட நுட்பங்களுடன் எடுக்கப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. ஃபார்முலா படங்களை பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு நிச்சயமாக இது போன்ற படங்கள் பிடிக்கும்.

தமிழில் மூன்று விருதுகள் பெற்ற ஒத்த செருப்பு தாமதமாக வெளிவந்த மலையாள Alone திரைப்படம். இரண்டு திரைப்படங்களுக்கும் முதலில் பாராட்டு.

முக்கிய கதாபாத்திரம் முழு பொறுப்பேற்று மொத்தமாக ஒரு திரைக் கதையைக் கொண்டு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தமிழில் சிறிது மிகைப்படுத்தி இருந்தாலும் விறுவிறுப்பு குறையாமல் கதை நகர்கிறது. மலையாளத்தில் சிறப்பாக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப வரக்கூடிய அம்மா பெண் குரல்கள் கொஞ்சம் monotonous repetition. என்றாலும் கதை அருமையாக கூறப்பட்டிருக்கிறது அந்த கொரோனா லாக்டவுன் எப்படி ஒரு அப்பார்ட்மெண்டில் முழுமையாக அனுசரிக்கப்பட்டதோ அதை அப்படியே காட்டியிருக்கிறார்கள். இது போன்ற நுட்பத்துக்கு (protoganist is the only one character for the whole narrative) முற்றிலும் உகந்த ஒரு பின்னணியாக அமைந்திருக்கிறது. தமிழில் அந்த அளவிற்கு ஒரு விசாரணை கைதி தனிமையாக இருக்க முடியாது என்பதால் சுற்றிலும் காவலர்கள் இருந்து கொண்டு அவரை மட்டும் காட்டுவதாக இருக்கிறது.அது அந்த அளவிற்கு இயல்பாக இல்லை. இருந்தபோதிலும் தமிழ் நடிகர் தான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக திறமையை காட்டி இருக்கிறார். மலையாள நடிகரிடம் எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்ததால் சற்று ஏமாற்றம் தான்..ஒரு கமல் அல்லது விக்ரம் அல்லது பிரகாஷ் ராஜ் ?



 மலையாளத்தில் பிற  கேரக்டர்கள் அந்த இடத்தில் இல்லாததே தெரியாத வண்ணம் ஒரு பின்னணியை தேர்வு செய்தது மிகச் சிறந்த உத்தி.உண்மையிலேயே பிறர் யாரும் இல்லை . HE IS ALONE.
 தமிழில் மனைவி மகன் சென்டிமென்ட் அதிகம். மலையாளத்தில் அது இல்லை.இனிமையாகப் பேசிக்கொண்டு ஏதோ ஒரு புரிதல் இல்லாத மதுரையா குருவாயூரா என்று திட்டமிடும் காதலி மட்டும். அப்புறம் இந்த வெறுப்பேற்றுகிற ஊர்க்கிழவி சீன்..
தமிழ் நாயகன் தனக்கு நேர்ந்த கொடுமைக்காக தானே பழி வாங்குகிறான். மலையாள நாயகன் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகளைக் கொண்டே தண்டித்து விடுகிறான்.
தமிழில் சின்னஞ்சிறு உயிர்களிடம் கருணையை காட்டும் இளகிய மனம் படைத்தவனே கொலைகாரனாக மாறியிருப்பதை காட்டியிருக்கிறார்கள். மலையாளத்தில் முன்பின் அறியாத தாய் மகள் இருவரிடமும் அக்கறை காட்டும் சமூக சிந்தனையாளனாக அதே நேரத்தில் கொடூரமாக தண்டிக்கும் குற்றவாளியாக Characterization 
மன நோயாளியாக முழுக்க முழுக்க இருவரையும் காட்டி இருந்தாலும் கடைசியில் தமிழ் நாயகன் மனநிலையில் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லாதவனாக முடிக்கிறார்கள். மலையாளத்தில் ஒரு மன நோயாளியின் காதுகளில் ஒலிக்க கூடிய குரல்கள் சற்று அதிகமாகவே ஒலிக்கின்றன . ஆவி பேய் என்றெல்லாம் சிறிது நம்ப வைக்க செய்த முயற்சி நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். குற்றவாளிகளை தேடி கொலை செய்து குற்றங்கள் புரிந்தாலும் இறுதியில் எந்த பாதிப்பும் இல்லாதவன் போல எளிமையாக தப்பித்து போய்க் கொண்டே இருக்கிறான். ஆனால் அவனும் மன நோயாளி இல்லை என்பதை யார் வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம். இரண்டுமே மிகச் சிறப்பான திரைப்படங்கள். 
தமிழ் திரைப்படத்தில் கதாபாத்திரத்திடம் ஒரு இரக்க உணர்வை தூண்டி இருப்பார்கள் .மலையாளத்தில் அவனைப் பார்த்தால் அதிசயிக்க தோன்றும் ஒரு மிரட்சி ஏற்படும். இரண்டுமே ரசிக்கும்படி இருந்தன. 
Cast away என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது. ஒரு விமான விபத்தில் எதிர்பாராத விதமாக தப்பி பிழைக்கும் ஒரே ஒரு நபர் தன்னந்தனியே ஒரு தீவிற்குள் சிக்கிக்கொள்கிறார் உதவி எதுவும் இல்லாத நிலையில் நான்கு ஐந்து வருடங்கள் அங்கே கொடுமையான தனிமையில் வசிக்க நேரிடுகிறது அப்போது அவர் உயிர் இல்லாத ஒரு ஜடப்பொருளிடம்- தானே உருவாக்கிய பந்து என்று நினைக்கிறேன் -அதை வைத்துக்கொண்டு உரையாடுவதாக திரைப்படம் இருக்கும் . இந்த இரு படங்களிலும் உயிருள்ள ஜீவன்கள் உயிர் இல்லாத ஜடப் பொருள்கள் இவற்றிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக காட்டியிருப்பார்கள்.typically
இந்த நுட்பம் உண்மையில் தமிழ் படத்தில் அதிகம் காட்டப்படுகிறது மலையாள படத்தில் சில குழந்தையின் பட ஆல்பத்தை வைத்து துப்பு துலக்குகிறார் தமிழ் படத்தில் கதாநாயகனுடைய புத்திசாலித்தனம் ஓரிரு இடங்களில் இது போல் வெளிப்படுகிறது.
இந்த நுட்பத்தை பொருத்தவரை பெரும்பாலும் ஆங்கில நாவல்கள் நாடகங்கள் போன்றவற்றில் இது போன்ற சிறிய விடயங்கள் திறமையாக துல்லியமாக கையாளப்பட்டிருக்கும்.
ஒரு கதாபாத்திரத்தின் மனதிற்குள் ஏற்படக்கூடிய சிந்தனைகளை காட்டுவதற்கு திரைப்படம் பார்ப்பவர்களை கதாபாத்திரத்தின் மனதுக்குள் நுழைத்து அழைத்துச் செல்வது என்பது நாவல்களிலும் நாடகங்களிலும் பல ஆண்டுகளாகவே உபயோகிக்கப்படும் ஒரு நுட்பம். திரைப்படங்களில் இயல்பாகவே மெருகேறி இருக்கிறது

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...