வெள்ளி, 25 ஜூன், 2021

Why insure? காப்பீடு செய்வது எதற்காக?


மருத்துவ காப்பீடு அவசியம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீடு சிறந்த முதலீடாகவும் அமையும்.

இவை தவிர வாகன காப்பீடு (மூன்றாம் நபர் இழப்பீடு) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் வேண்டுமென்றால் தனிமனித விபத்துக் காப்பீட்டுத் தொகையை அதிகமாக்கி எடுத்துக் கொள்ளலாம்.

ஓரளவு குறைந்த செலவில் காப்பீடு செய்வதற்கான பல பாலிசிகள் உள்ளன.

2012ஆம் ஆண்டில் பெண் குழந்தை உள்ள குடும்பத்தினருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஆஷா கிரன் காப்பீடு மிகச் சிறப்பானது. ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர் மட்டும் இந்த பாலிசி எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ காப்பீடு -

மிகக் குறைந்த பிரீமியம். பாலிசிதாரரின் பிரிமியம் தொகையில் பாதி மட்டுமே அவரது மனைவிக்காக வசூலிக்கப்படும். அந்தத் தொகையிலும் பாதி பெண்குழந்தைகளுக்காக வசூலிக்கப்படும். உலக பெண்குழந்தை ஆண்டான 2012ல் துவங்கப்பட்ட சிறந்த திட்டம்.

மேல்மட்ட, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு உள்ளது.

குழுக்களாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆரோக்கிய சஞ்சீவனி மற்றும் 60 + என்ற குறிப்பிடும்படியான இரு சிறந்த திட்டங்கள் உள்ளன.

18 + வயதினருக்கான அனைத்து அனைத்து மருத்துவ காப்பீடு திட்டங்களும் பயனுள்ளவை.



பிறரின் வெற்றி! true happiness



யாருடைய வெற்றியைப் பார்த்து அவர்களை  விட அதிகம் மகிழ்ச்சி அடைந்தீர்கள் ? 

பல பேருடைய வெற்றியைப் பார்த்து அவர்களை விட அதிகம் மகிழ்ந்ததுண்டு.

உறவுகள், சில அலுவலக நட்புகள், சில கல்லூரி நட்புகள், சில அன்பு நெஞ்சங்கள்.

கல்லூரியில்

மாணவர் தேர்தலில் எனது சினேகிதி வெற்றி பெற்று அவள் பெயர் கல்லூரி மாணவர் சேர்மன் என்று அறிவிக்கப்பட்ட போது (கூக்குரலிட்டது நான்தான்)

பிறகு அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆன போது.(செவ்வாய் தோஷம் அது இது என்று பரிகாரங்களை செய்து கொண்டிருந்தாள்)

சில உறவுகள்

எனது நெருங்கிய உறவுகளில் ஒருவர் முதுகெலும்பில் அறுவை சிகிச்சை நடந்த பின் தொற்று;(wound infection) ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஒரு வருடம் கிடந்து தொடர் சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடமாடி குனிந்து வாசலில் கோலமிட்ட போது

இன்னொரு உறவினர் கேன்சரில் இருந்து மீண்டு வந்தவர் இயல்பு நிலைக்கு வந்து அனைத்து பணிகளையும் முன்பு போலவே மேற்கொண்டதைப் பார்த்தபோது

மேடைப் பேச்சாளராகவும் தொழிற்சங்க தலைவராகவும் இருந்த மற்றொரு உறவு, திடீரென்று ஒரு நாள் குரல் பாதிக்கப்பட்டு (stroke)செயலிழந்திருந்த பிறகு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பின் இன்று மீண்டும் மேடையில் மட்டுமின்றி , யூடியூபிலும் ஆன்லைன் வகுப்புகளிலும் என்று அவரது குரல் ஓங்கி ஒலிப்பதைப் பார்க்கும்போது.

அறிமுகங்கள்

பொறுப்பின்றி கிரிக்கெட் விளையாட்டில் கேம்பிலிங் செய்து விளையாடிக்கொண்டு அரியர்ஸ் வைத்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த மகனை என்ன செய்வதென்று தெரியாமல் விட்டு வைத்திருந்த பணிப்பெண் அவனுக்கு ஒரு வேலை தேவை என்று கேட்டபோது அவன் முதலில் படிப்பை முடித்து டிகிரியை கையில் வாங்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதற்கு ஏற்ப அந்தத்தாய் அவனை வழிநடத்தி , அவனது டிகிரி சான்றிதழை ஒரு நாள் என்னிடம் கொண்டுவந்து காட்டியபோது.

அலுவலகத்தில்

தற்காலிக ஊழியர்கள் 30 இளைஞர்கள் இளம் பெண்கள் பல போராட்டங்களுக்கு பிறகு நிரந்தரமான பணிக்கான ஆணை பெற்றபோது.

பொறுப்பாக வேலை செய்த மேலதிகாரிக்கு தவறாமல் அடுத்தடுத்த பதவி உயர்வு வந்த போதும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்த போது கண்கள் கலங்க நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் விடை தந்து வழி அனுப்பிய போதும்.(Fiji கிளைக்கு சென்றார்)

அக்கம் பக்கத்தில்

அண்மையில் அண்டை வீட்டில் கொரோனாவில் இருந்து ஒரு புதுமண தம்பதி மீண்டு வந்த போது

இனி அடுத்தது யாருடைய வெற்றி என்று கேட்டால் என் பதில் தேர்தலில் நான் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் வெற்றி அடையும்போது மகிழ்வேன் என்பதுதான்.


புதுப்பித்தது:


மகிழ்ச்சி அடைந்தேன்.

அண்மையில் ஒருவர் மருத்துவமனையில் கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாமல் இருக்கும் நிலையில் உதவி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்த உதவி கிடைத்தது என்று கேள்விப்பட்டால் மகிழ்வேன்.

22.06.2021


வியாழன், 24 ஜூன், 2021

தன்னம்பிக்கை உற்சாகமூட்டும் வரிகள்

பத்து திங்கள் உன்னை சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்.
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்.

வாலி அவர்களின் நான் ஏன் பிறந்தேன் பாடல் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

நாடென்ன செய்தது உனக்கு நீ என்ன செய்தாய் அதற்கு எனக் கேட்டால் நன்மை உனக்கு.

இது அறிஞர் அண்ணா அடிக்கடி கூறியது.
ஆனால் ஒரிஜினலாக ஜான் எஃப்  கென்னடி இளைஞர்களுக்கு கூறியது.

And so, my fellow Americans: ask not what your countrycan do for you-ask what you can do for your country.

திரைப்படப் பாடல்களில் வாலி போன்றவர்கள் எடுத்து மொழிந்தார்கள்.
M G R போன்றவர்கள் திரையில் பிரபலப்படுத்தினர்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.

இது எனக்கு மிகவும் பிடித்த வரி.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் என்ற பாடல் சிறந்த திரைப்படப்பாடல்களில் ஒன்று.

Vedha


"It is enough" மற்றும் "it is been enough" - இவ்விரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இரண்டாவது வாக்கியத்தில் இலக்கணப் பிழை உள்ளது.

Is என்பது ஒரு போதும் been கூட சேர்ந்து வராது.

It is enough என்பது சரியான பயன்பாடு(Simple present)

It was enough என்பதுவும் சரியாக இருக்கும்(simple past).

(Eg)

It has been…( present perfect) difficult to manage

It has been hard to stay there …

(While speaking, you may hear -its been hard- the word has sounding like is)

கோவிட்-19 - இதனால் நாம் இழந்ததும் பெற்றதும் என்ன?

பல இன்னுயிர்களை இழந்து விட்டோம்.

இறப்புகளால் நிர்க்கதியான குடும்பங்கள்

பொருளாதார வீழ்ச்சி (ஏற்கனவே தொடங்கி இருந்த வீழ்ச்சி வேகமெடுத்தது)

பல இல்லங்களில் பற்றாக்குறை

வேலை இழப்பு

தொழில் முடக்கம்

பசி பட்டினி

வாழ்வாதாரமே கேள்விக்குறி

உறவுகளைப் பிரிந்து வாழும் தவிப்பு

குடும்பத்தினரிடையே ஒற்றுமை இழப்பு

சிலருக்கு தற்காலிக பிரிவினால் ஏற்பட்ட நிரந்தர பிரிவு

பலருக்கு திடீர் உடல்நலக் குறைவு

வயதானவர்கள் மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் உடல் நலம் பாதிப்பு

குழந்தைகளின் கல்வி தடை, சிக்கல்

சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடாமல் வீட்டினுள் முடக்கம்

பெண்களுக்கு வீட்டில் அதிகமான வேலை

ஆண்களுக்கு அதிக பொறுப்பு கவலை

நடைப்பயிற்சி இல்லாமல் அடைந்து கிடைக்கும் நிலையில் அனைவருக்கும் ஆரோக்கியக் குறைவு

மன அழுத்தம் வெறுப்பு கவலை கண்ணீர்

விழாக்கள் இல்லை

விருந்துகள் இல்லை

இறை வழிபாடும் இல்லை

தனிமை உணர்வு

வாழ்க்கையில் பிடிப்பின்மை

பிரிந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை சந்தேகம்

எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் மரணம் குறித்த சிந்தனை.

மொத்தத்தில் சிரிக்க மறந்தோம்; மகிழ்ச்சி இழந்தோம்.

அப்படி என்ன தான் கிடைத்தது?

வீட்டிலேயே அமைதியான முறையில் இறைவழிபாடு செய்தோம்.

எளிமையாக வாழ கற்றுக் கொண்டோம்.

உடல் நலம் பேண ஆரம்பித்தோம்.

கடை வீதிக்குச் சென்று தேவையற்றவற்றை வாங்கிக் குவித்த நிலைமாறி அத்தியாவசியப் பொருள்களை மட்டும் வாங்கியதால் பணம் சேமிப்பு.

தூய்மை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்தோம். புறத்தூய்மை அகத்தூய்மை இரண்டும்தான்.

ஏழை எளியவர்களிடம் மனம் கசிந்தது.

அரசாங்கத்தின் சொல் கேட்டு நடக்க அனைவரும் முயன்றது.

ஏழை பணக்காரன் என்று பாராமல் வைரஸ் அத்தனைபேரையும் தாக்கியதால், பலருக்கும் தான் என்ற அகம்பாவம் அழிந்தது.

மனித நேயம் தழைத்தது.

இன்று கோயில்களைத் திறந்து விட்டோம் என்ற போதிலும் கொரோனா ஒழிந்த பாடில்லை.

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்.. நிலைமை மாறும்.

எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.

31.12.2020 ல் எழுதியது

உதவி கோரும் முதியவர் 




சிறு வியாபாரி 



புதன், 23 ஜூன், 2021

உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி விளம்பரம் எது?

தொலைக்காட்சியின் நன்றாக இருப்பதே விளம்பரம் ஒன்று தான்.

உண்டியலை ஏன் ஒடச்ச?
உங்க பர்த்டேக்கு உங்க கிட்டயே பணம் கேட்கிறதா?
டெட்டால் பிக்கி பேங்க் விளம்பரம்.

https://youtu.be/lgxK-Er2RSE

image from youtube



Dt 23.06.2021

உளவியல் -பெண்கள்

பெண்கள் மனதை புரிந்து கொள்வது கடினமா, ஆண்கள் மனதை புரிந்து கொள்வது கடினமா?


பெண்கள் பலவழிகளிலும் வெளிப் படுத்தி விடுவார்கள். அவர்கள் கண்கள் கூட பேசும். நடை உடை பாவனை எல்லாமே அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும்.
இந்த ஆண்களைப் புரிந்துகொள்வது தான் கடினம்.
பெண் மனசு ஆழம் அது இது என்பதெல்லாம் பழைய சிந்தனை .
கொஞ்சம் மாற்றித் தான் யோசிப்போமே.





செவ்வாய், 22 ஜூன், 2021

மொழி -ஆங்கிலம்



your days are numbered" என்று கூறியதற்கு "my steps are measured"என்று அண்ணா பதிலளித்தது போல நயமான ஆங்கில பதிலடி வேறு ஏதாவது கூற முடியுமா?Question courtesy Uma, Tamil Quora 

1.பிரபல பாடகி: You know, I insured my voice for $50000.

Hopkins: that's wonderful what did you do with that money?

2.வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை மது அருந்தி விட்டு வந்த போது மாற்றுக் கட்சியில் இருந்த ஒரு உயர் வகுப்பைச் சார்ந்த பெண்மணி முகம் சுளித்துக் கொண்டு

You Sir are drunk .. என்று அனைவர் முன்னிலையிலும் கூற அதற்கு அவர்

You madam, look ugly, I will be sober in the morning (ஆனால் நீங்கள்?)என்றாராம்.

3.மகாத்மாவிடம் ஒருவர் நீங்கள் உலகிற்கு என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்றபோது

"My life is my message", என்றாராம்.

இதெல்லாம் பெரிய மனிதர்கள் சொன்னது.

இப்போது நாங்கள் சொன்னது.

4.எங்கள் புதிய பாஸ் வந்ததும் வராததுமாக அலுவலகத்தின் சுவரெங்கும் உற்சாகமூட்டும் வாக்கியங்களை ஒட்டி வைத்தார்..(தானே ஸ்டூல் போட்டு ஏறி.)

Hard work works

Work hard, work smart

Attitude determines altitude

(இந்த அலுத்துப் போன stale stuff )எல்லாவற்றையும் நாங்கள் வேறு சில வாக்கியங்களாக மாற்றி ஒட்டி வைத்தோம்.

Hard work works hardly. (where is the elevation)

If you work smart, why work hard?

Pressure determines Altitude.

(Boss smiled )

5..பல வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டுக்குத் திரும்பிய ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் கேட்டது:

Surprised thatTamil Nadu has not developed even after 10 years.

Tamil resident: Despite the fact, you left Tamilnadu since ten years,Surprised.

(Dear NRI ladies and gentlemen please take it easy)

திங்கள், 21 ஜூன், 2021

ஒரு வேலையை வேகமாக செய்வீர்களா இல்லை விவேகமாக செய்வீர்களா?


விவேகமாக சிந்தித்து 
வேகமாகவும்
சரியாகவும் 
செய்யப் பிடிக்கும்.

1.விவேகம் என்பது மூளை சம்பந்தப்பட்டது. Responsibility and maturity

2.வேகம் என்பது திறமை சம்பந்தப்பட்டது. Speed

3.சரியாக செய்வது என்பது கவனம் குறித்தது. Accuracy.

இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரியும்.
செய்ய முடியாவிட்டால் குறைந்தது அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கலாம் என்றும் தெரியும்.

எல்லாம் தெரிந்தும் வாழ்க்கை நம்மை 'வைத்து செய்யும்' என்றும் தெரியும்.

என்னதான் தெரியாது?
சமயத்தில் கடலைப்பருப்புக்கும் துவரம்பருப்பக்கும் வித்தியாசம் கூட தெரிய மாட்டேன் என்கிறது.

கண்ணாடி போடு இல்ல லைட்டை போடு.

கண்ணாடி தான் உடைஞ்சு போய்விட்டதே [என் மனசு மாதிரியே] , 
lockdown இல் எங்கே போய் repair செய்யறது. லைட் போட்டுக்கலாம்.
 
.

 




அனைவருக்குமான உடல்நலக் குறிப்பு பகிர முடியுமா?

தண்ணி குடிக்கலாம்.
தண்ணி அடிக்க கூடாது.

அப்பாடா ஒரு Do அண்ட் ஒரு don't சொல்லியாச்சு

இன்னிக்கு ஒரு மெசேஜ் கொடுத்தாச்சு.போய் தண்ணி குடிக்க வேண்டியதுதான்

image courtesy:google
.

ஞாயிறு, 13 ஜூன், 2021

இந்த வாழ்க்கை எதற்காக ?

 1.எனக்குக் கூட தான் விண்வெளிப் பயணம் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

நடக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

2.கட்டுப்படுத்திக் கொண்டு தான் வாழ வேண்டும்.

மனதை

உடலை

நம் தேவைகளை

நம் எதிர்பார்ப்புகளை

கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சொல்வது எளிது செய்வது அரிது.

என்றாலும் இதை நாம் செய்துதான் ஆக வேண்டும்.

3.நம்மைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் அது வாழ்க்கை இல்லை.

இந்த வாழ்க்கை நமக்கானது அல்ல என்று ஆகும் போது (ஒருவேளை)

பிறருக்காக வாழ்வதே வாழ்க்கையாக இருக்க முடியும்.

நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்காக-

குடும்பத்திற்காக-

பிற உறவுகளுக்காக-

நண்பர்களுக்காக-

தொழில்ரீதியான அலுவல் ரீதியான உறவுகளுக்காக-

நாம் சார்ந்திருக்கும் அல்லது நம்மைச் சார்ந்து இருக்கும் அத்தனை பேருக்காகவும்

இன்னும் சொல்லப்போனால் நாம் வாழும் இந்த பூமியில் உள்ள பிற உயிர்கள் அனைத்திற்காகவும்

வாழ்வதை நமது நோக்கமாக ஆக்கிக் கொண்டால்

எதற்கு இந்த வாழ்க்கை என்று கேட்க மாட்டோம்.

வினோதமான காப்பீடு

 எங்கள் நிறுவனம் காப்பீடு செய்துள்ள சில சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன்னதாக வேறுசில ஆர்வத்தைத் தூண்டும் தகவல்கள்.

மேற்கத்திய நாடுகளில் அழகிய மாடல்கள் திரை நட்சத்திரங்கள் தங்களது அழகான அங்கங்களை காப்பீடு செய்துகொள்வது பழக்கத்தில் உள்ளது.

அதுபோல் தங்களது கண்கள் அழகிய இடை கால்கள் மார்பகங்கள் பின்புறம் என்று தங்கள் அங்கங்களைத் தனித்தனியே பல மில்லியன் கணக்கான டாலர்களுக்குக் காப்புறுதி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கலாம்.

ரோலிங் ஸ்டோன் இசை நிறுவனத்தின் கிட்டார் இசைக்கலைஞர் தனது கைகளை 61.6 மில்லியன் டாலருக்கு காப்புறுதி செய்திருந்தார்.( இன்றைய மதிப்பில் இன்னும் பல மில்லியன்கள்)

நம் நாட்டிலும் இதுபோன்ற காப்புறுதிகள் செய்யப்பட்டுள்ளன.

பாடகர்கள் தங்கள் குரலுக்குக் காப்புறதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா(மிஸ் வேர்ல்ட் 2000) தனது புன்னகையை காப்புறுதி செய்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் அவர்களின் குரல் காப்புறுதி செய்யப்பட்டது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரஜினிகாந்த் அவர்களின் காந்த குரலை அவர் காப்புறுதி செய்திருக்கிறார்.

இந்த மில்லெனியத்தின் துவக்க ஆண்டுகளில் பல இளைஞர்களின் ஹோம் ஸ்கிரீனை ஆக்கிரமித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கைகளை மட்டும் தனியாக இன்ஷ்யூர் செய்துகொண்டார்.

இவை தவிர எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய எங்கள் நிறுவனத்தின் காப்புறுதி ஏற்பாடுகள் பற்றிக் கூறுகிறேன்.

பத்மாவத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகையில் எங்கள் நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 300 கோடி ரூபாய்க்கு படத்தை இன்ஷ்யூர் செய்திருந்தார்கள். மும்பை மண்டல அலுவலகம் II.

படம் வெளிவருவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருந்த போது அதனால் ஏற்பட்ட பண இழப்புகளை கோடிக்கணக்கில் இழப்பீடு செய்ய வேண்டும் என்று எங்கள் சிஎம்டி உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த நிலையில் நல்லவேளையாக படம் ரிலீஸ் செய்யப்பட்டது சின்னதொரு பெயர் மாற்றத்துடன். பல சர்ச்சைகளுக்கு இடையே பத்மாவதி என்பது பத்மாவத் என்று மாற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம். தொலைக்காட்சியில் பார்த்து நாங்களெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம். பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 400 கோடியை எளிதில் தாண்டியது.

ஜாய் ஆலுக்காஸ் மாடல் நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் காப்பீடு இந்த மும்பை மண்டல அலுவலகம் II ல் தான் உள்ளது.

அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை கட்டப்பட்டு வந்த போது அதனை பல கோடிகளுக்கு இன்ஷுர் செய்ததும் இதே நிறுவனம்.(Engineering project )₹2969 கோடி. செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிலை. மும்பை மண்டல அலுவலகம் III

அனைத்து IPL போட்டிகளும் காப்பீடு செய்யப்படுவது நியூ இந்தியாவின் இந்த மும்பை மண்டல அலுவலகம் III ல் தான்.

லாக் டவுனுக்கு முன்னதாக மார்ச் மாதம் 2020 திரையிடப்பட்ட பிரபல திரைப்படம் ஹிந்தி மீடியம் கூட இந்த அலுவலகத்தில் தான் இன்ஷ்யூர் செய்யப்பட்டது.

திரு .ரத்தன் டாட்டா அவர்களால் நிறுவப்பட்ட தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (பிரிமியர் மல்டி நேஷனல்)நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர் 1 இடத்தை வகிக்கிறது.

The body parts

கல்யாணம் ஏன் பண்ணணும் ?

 அதானே ஏன் பண்ணனும்?

கொஞ்சம் சிந்திப்போம்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார சீர்கேடு தொழில் முடக்கம் இவையெல்லாம் குறைய வேண்டுமென்றால் கல்யாணங்கள் நடக்க வேண்டும்.

அதுவும் ஆடம்பரமாக நடக்க வேண்டும்.

நம்முடைய செல்வத்தை ,செல்வாக்கை கல்யாண பத்திரிக்கையே பறைசாற்ற வேண்டும் .

பந்தல் காரரிலிருந்து பாத்திரம்,பட்டுப்புடவை நகைக்கடைகாரர் வரை தொழில் முன்னேற வேண்டும் என்றால் கல்யாணம் நடக்க வேண்டும்.

பெரிய கல்யாண மண்டபம் தேவை. முதல் நாள் 500 பேர் சாப்பிட அடுத்த இரண்டு நாள் இரண்டாயிரம் பேர் சாப்பிட வேண்டும். முதல் நாள் ரிசப்ஷன் ஓபன் லான். மழை வந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ள பெரிய ஆடிட்டோரியம் தயாராக இருக்க வேண்டும்.

வெளியூர் உறவினர்கள் அத்தனை பேரும் தங்குவதற்கு மிகப்பெரிய விடுதிகளில் தனித்தனி அறைகள் தயாராக இருக்க வேண்டும்.

மணமகள் (தமிழ் மணமகள் தான்)வெளியூரிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய பாரம்பரிய உடை தைக்க அளவு கொடுத்துவிட்டு திரும்பி செல்ல வேண்டும்.

பிறகு திருமணத்திற்கு ஒரு முறை வரவேண்டும்.

மணமக்களின் பெற்றோர் அழைப்பிதழை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக மாநிலம் மாநிலமாக நேரில் சென்று உற்றார் உறவினரை அழைக்கவேண்டும். அதுக்கு ட்ராவல்ஸ் புக்கிங் பண்ணவேண்டும்.) Airlines cabs,,travel agency) சில பெரிசுகளை ஏர் லிப்ட் பண்ணி கொண்டு வரவேண்டும்

சிறிய மாக்கோலத்திற்கு 100 ரூபாய் மணவறையில் பெரிய கோலத்திற்கு 1000 ரூபாய் ,ஆல்பம் பார்த்து செலக்ட் செய்வதில் தொடங்கி

மணமகள் மணமகன் பியூட்டி பார்லர்,

மணவறை அலங்காரம்

ஆரத்தி தட்டுகள்

போட்டோஷூட், காணொளி டிஸ்ப்ளே. டான்ஸ் ப்ளோர் டிஜே

மாப்பிள்ளை அழைப்புக்கான அலங்கார ஊர்தி

வட இந்திய பாணியில் குதிரை

இசைக்கருவிகள் Band

மணமகள் வருவதற்கான பல்லாக்கு ,

மலர் அலங்காரம்(மண்டபத்திற்கு உள்ளே மண்டபத்திற்கு வெளியே) இயற்கை அல்லது செயற்கை மலர் மாவிலை வாழை

மெஹந்தி போடும் பெண்கள்.

மணமக்கள் மற்றும் நண்பர்கள் தங்கைகள் அக்காக்கள் கல்யாணத்தில் அரங்கேற்றம் செய்யப்போகும் ஆடல் பாடலைக் கற்றுக்கொள்ள அதற்கான ட்ரெய்னிங் கொடுக்கும் கம்பெனி

மணமக்களின் நண்பர்களுக்கு

"சிறப்பு"கவனிப்பு

முக்கிய உறவினர் சிலருக்கு கார் அரேஞ்ச் பண்ண வேண்டும். அந்த ஊரை சுற்றி பார்க்க அவர்களுக்கு cab trips.

அப்புறம் சாப்பாடு முக்கியம். கேட்டரிங் யார் என்று அழைப்பிதழிலேயே போட வேண்டும்.

மேட்ரிமோனியல் சைட் பிரிமியம் மெம்பர்ஷிப் தொடங்கி நிறைவாக தாம்பூலம் ,காம்ப்ளிமென்ட் வரை(நலுங்கு வைத்த அத்தனை பேருக்கும் சிறப்பு காம்ப்ளிமென்ட்) அனைத்தும் வேண்டும். யாருக்கும் எந்த குறையும் வைக்கக் கூடாது.

இவ்வளவும் நடந்த பின்னும் கல்யாணத்துக்கு (கல்யாண வாழ்க்கைக்கு)யாரும் கேரன்டி கிடையாது. சாரி. (காப்பீடு கிடையவே கிடையாது)

ஏனென்றால் அது இறைவன் கொடுத்த வரம்.

கை பிடிப்பது என்பது கை குலுக்குவது போல் பாக்ஸிங் செய்யப் போவதன் துவக்கம் அல்ல. அது மரணம் நம்மைப் பிரிக்கும் வரை என்று உறுதி அளிப்பதாகும்.

அப்படி இல்லை என்றால்"கல்யாணம் ஏன் பண்ணனும்?

வியாழன், 10 ஜூன், 2021

ஆண்கள் கொஞ்சம் தொப்பையுடனும் சதைபற்றுடன் இருந்தால் பெண்களுக்கு பிடிக்குமா?

 உண்மை. அப்படி இருந்தால் தானே வேறு பெண்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள்? பிரச்சினை இல்ல பாருங்க.

வழுக்கை விழுந்தால் இன்னும் சந்தோஷம்.பல் விழுந்தால் அதை விட சந்தோஷம்.

நான் பொதுவா சொன்னேன்.

எந்த கடையில நீ அரிசி வாங்குற, குண்டு கத்திரிக்கா

அதே அப்பாவுக்கு தொப்பை என்றாலும் மகிழ்ச்சி

அப்பாவோட தொப்பையில் எட்டு வயது வரை விளையாடிவிட்டு பிறகு அண்ணன், எட்டு வயது எருமைக்கடா என்று கேலி செய்த பிறகு நிரந்தரமாக எட்டடி தள்ளி நின்று விட்டது வேறு கதை.(அவனுக்கு பொறாமை லைட்டா?)

அதே அண்ணனுக்கு தொப்பை போட்டிருந்தால் ( oh my god, he is losing his charm…டேய் அண்ணா யோகா பண்ணுடா watch out the overhang…ஐயோ அம்மா)

அதே ஒரு மாமியாராக இருந்தால் மகன் தொப்பை போடுவதற்கு மருமகள் சமையல் தான் காரணம் என்று சாடிவிட்டு ஒரு ரவுண்ட் வருவதற்கு வாய்ப்பு என்று நினைக்கிறேன்.

ஒரு சிறந்த உளவியல் ரீதியான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

செவ்வாய், 1 ஜூன், 2021

My creation and recreation

Welcome to my blog!

I am Vedha . My mother tongue is Tamil and hence my posts will be in Tamil along with the global language. English.
Do view my posts as and when you wish and enjoy the journey with me.

வலைப்பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!
எனது பதிவுகளை இரசிக்க, என்னோடு பயணிக்க தங்களை வரவேற்கிறேன்.

Presently my topics are:

Literature
Language
Fine arts
Personal experiences
A bit of humor
And Insurance which is my profession 

















கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...