கல்லூரியில் இளநிலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது பைபிள் எனக்கு சிலபஸில் இருந்தது.
ஆனால் மொத்தம்16 புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் நாங்கள் 12 புத்தகங்கள் தெரிவு செய்து படித்து அவற்றில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்பது விருப்பத் தேர்வாக இருந்தது.
பாடத்திட்டத்தில் 12 புத்தகங்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமப்படும் போது, ஒன்றிரண்டு மிகவும் கடினமானதாக இருந்தன.அதனால் பெரும்பாலான மாணவிகள் தேர்வு செய்யாத பைபிளையும் சேர்த்து கூடுதலாக படித்து வைத்திருந்தேன்.
அப்போதுதான் கேள்விகளுக்கு எளிதாக பதில் அளிக்க முடியும் என்று அவ்வாறு தயார் செய்திருந்தேன்.
பைபிள் பகுதிகள் ஆங்கில அறிவு மேம் படுவதற்கு உதவின.
பைபிள் மிகச் சிறந்த இலக்கிய படைப்பு என்பதில் ஐயமில்லை.
அதுபோல பகவத் கீதையில் உள்ள சிறந்த வழிகாட்டுதல் வாழ்க்கை நெறி உயர்ந்த சிந்தனைகள் இவற்றை அனைத்து மத இளைஞர்களும் அறிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
பிள்ளைகள் பின்னாளில் அதற்காக நன்றி சொல்வார்கள் அதை கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
மதங்களைக் கடந்த கல்வியறிவு கட்டாயம் தேவை.
அனைத்து மத நூல்களையும் கற்றுத் தெரிந்த பிறகுதான் நாத்திகவாதிகளே நாத்திகம் பேசினார்கள்.
'பல திரைப்படங்களையும் பார்த்த பிறகு இது நன்றாக இல்லை அது சரி இல்லை என்று சொல்வது போல' என்று கூட விளையாட்டாக சொல்வது உண்டு.
முடிந்தால் அனைத்து மதங்களையும் பற்றி நன்றாக அறிந்து கொள்வது நலம். பரந்து விரிந்த மனப்பான்மை வளர்வதற்கு உதவும்.
