திங்கள், 28 மார்ச், 2022

ஆங்கில நாடாகசிரியர் மற்றும் கவிஞர் ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் உங்கள் மனம் தொட்ட படைப்பை பகிர முடியுமா?

ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் பெரும்பாலும் அனைவரும் அறிந்தவையாகவும் எல்லோரும் விரும்பும் விதத்தில் அமைந்து உலகப் புகழ் பெற்றவையும் அவர் எழுதி அரங்கேற்றிய நாடகங்கள் தாம்.

அவை தவிர எனக்குப் பிடித்தவை குறைந்த அளவில் அவர் எழுதிய கவிதை படைப்புகள்.

இலக்கியம் பயின்றவர்களைத் தவிர வெகு சிலரே கேள்விப்பட்டிருக்கலாம். 14 வரிகளில் எழுதப்பட்ட Sonnets- ல் நான் மயங்கிய போது எனது வயது 18. சில வருடங்கள் கழித்து அவற்றைத் தேடிப்பிடித்து ஒன்றே ஒன்றை மனப்பாடம் செய்து ஆழ்மனதில் ஒருவருக்கும் தெரியாமல் புதைத்து வைத்துக்கொண்டேன். கம்பனைப்போல காதலின் மகத்துவம் உணர்த்தும் படைப்பு.

ஆத்மார்த்தமான காதலையும் யதார்த்தமான உடல் ரீதியிலான உணர்வையும் இரு பிரிவுகளாகக் கூறிய பாடல்கள் இன்றளவும் பல்வேறு கோணங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டாடப்படுபவை.

இன்பியல் நாடகங்களைப் பொருத்தவரை As you like it

மரங்களின் ஊடே என்னைத் தாலாட்ட வருவாளா என்று பாடிக்கொண்டு வரும் திரைக் கதாநாயகன் கூட ஏனோ எனக்கு இதைத்தான் நினைவு படுத்துவார்.

துன்பியல் நாடகங்களைப் பொருத்தவரை

Othello -அந்தக் கருப்பு வீரனை வியந்து, பயந்து பார்த்து, பிறகு அவனது அழகிய காதலியை அவனுடன் சேர்ந்து இரசித்து, அவனது அன்பின் ஆழம் கண்டு பிரமித்து, அது துன்பத்தில் முடிந்த போதும் அவனை வெறுக்க முடியாமல் விரும்பவும் முடியாமல் இரக்கம் மேலிடத் திணறிய அனுபவம்.

 ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பின்னணியும் விரிவுரையும் உண்டு.


சனி, 26 மார்ச், 2022

இந்தியாவின் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்ன?

 ஆங்காங்கே உள்ள அனைத்து தீவிர பிரச்சினைகளும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. முழுமையாகக் கட்டுப் படுத்தப் பட்டு விட்டன என்று கூற முடியாது.

சில பிரச்சினைகள் வழக்கு மன்றங்களில் ஊறிக் கொண்டிருக்கின்றன அல்லது ஊற வைக்கப்பட்டிருக்கின்றன.

பல காலமாக இருந்து வந்த அயோத்தி பிரச்சினை முடிவுக்கு வந்தது.

விவசாயி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.ஏன் எதற்காக என்பதெல்லாம் அனைவரும் அறிந்தது.

அவ்வப்போது வெடிக்கும் உள்நாட்டு பிரச்சினைகள் எல்லாம் சில காலம் கழித்தாவது சுமுகமாக தீர்த்து வைக்கப்படுகிறது.

இவையெல்லாம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன வா என்றால் அதற்கு காலம் தான் பதில் சொல்ல முடியும்.

எந்தப் பிரச்சினையும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தலை தூக்கலாம்.

கொதிக்கும் பாலில் தண்ணீர் தெளித்து எவ்வளவு நேரம் பொங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்?

பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இப்போதைக்கு நாட்டில் அன்றாடப் பிரச்சினைகள் மட்டுமே இருக்கின்றன.

விலை உயர்வு விலைவாசி பொருளாதார வீழ்ச்சி என்று ஏற்கனவே இருந்து வந்த பிரச்சினைகள் பெருந்தொடற்றுக்குப் பிறகு அதிகரித்து விட்டன. இது உலகெங்கும் நிலவும் ஒரு நிலைதான்.

மற்றபடி நிரந்தரமான பிரச்சினைகள் என்று பார்த்தால்

  • நாட்டின் கல்வி என்பது எப்போதுமே விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் ஒன்று.
  • ஏழ்மை வேலையில்லா திண்டாட்டம் , சுத்தம் சுகாதாரம் உடல் நல கோளாறுகள் என்பவை மக்களை எப்போதுமே பாதித்து வந்திருக்கின்றன.
  • பெண்களுக்கான பாதுகாப்பு என்பது நாட்டில் எப்போதுமே சவாலான ஒன்றாக இருப்பது வேதனைக்குரியது.
  • வேளாண்மை என்பது என்றுமே சவால்களை சந்திக்கும் ஒரு துறையாகவே இருக்கிறது.
  • சுற்றுச்சூழல் மாசு அவ்வப்போது அதிகரித்து வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒன்று.
  • வெளிநாடுகளுக்கு இந்திய மார்க்கெட்டை திறந்துவிடும் நிலைமை தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஏற்றுமதிக் கொள்கை அவ்வாறு இருக்கிறது. மென்பொருள் போன்ற துறைகளுக்கு தேவையான இறக்குமதிப் பொருள்களின் விலை அதிகரிப்பது போன்றவை கவலைக்குரியவை. வளர்ந்துவரும் நாட்டுக்கு முட்டுக்கட்டைகள்.
  • இந்தியாவும் ஒரு சூப்பர் பவர் நாடு ஆக வேண்டும் என்றால் இவை அனைத்தையும் தாண்டி வர வேண்டும்.

வெளிநாட்டுத் தொடர்புகளை பொருத்தவரை உக்ரைன் ரஷ்யா போரில் நடுநிலைமை.

ரஷ்யாவை பகைத்துக் கொள்ள முடியாத நிலைமை.

அமெரிக்காவுடன் ஆன தொடர்புகளை உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

நடுநிலைமை வகிக்க வேண்டிய கட்டாயம். இதில் ஒன்றும் யாருடைய டிப்ளமேஸி திறமை எல்லாம் கிடையாது.

நாட்டின் உயர் பதவியிலிருக்கும் யாரொருவரும் இதைப்போன்ற முடிவைத்தான் எடுக்க வேண்டியிருக்கும்.

வேண்டுமானால் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்று கூறிக் கொண்டு நடுவில் கட்டை பஞ்சாயத்து செய்யலாம்.

உண்மை என்னவென்றால் அச்சம் பாதிப்புகள் குறித்த கவலை இவைதாம்.

இரு வீட்டுக்காரர்கள் சண்டை போட்டுக்கொண்டால் உள்ளே இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் கோழைத்தனம் நமக்கேன் வம்பு என்ற மனப்பான்மை என்று கூட சொல்லலாம்.

ரஷ்யாவின் மீது காலம் காலமாக இருந்து வரும் தேவையற்ற அச்சம் மற்றும் சார்புத்தன்மை. இதையெல்லாம் இனிமேல் இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.


பிப்ரவரி 2022

சனி, 12 மார்ச், 2022

மகளிர் தினத்தன்று சமையலறை உபகாரணங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக குறுஞ்செய்தி மூலம் பேசுபொருளாகிய பிளிப்கார்ட் நிறுவனத்தின் குறுஞ்செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்?

 இந்த ஆண்டு மார்ச்-8 மகளிர் தினம் அன்று ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை நோக்கத்தில் மற்றும் ஆர்வக்கோளாறில் செய்த ஒரு தவறினால் பெருத்த எதிர்ப்புகளைச் சந்தித்தது.

இந்த நிறுவனம் செய்த விளம்பரத்தில் பிற்போக்கு கருத்துக்கள் முன்வைக்கப் படுவதாக பல்வேறு தரப்பிலும் எழுந்த குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்தன.

குறிப்பாக இந்த ஆண்டு,2022 ல் சர்வதேச மகளிர் தினத்திற்கான தீம் 'நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்' என்பதாகும்.

“Gender equality today for a sustainable tomorrow.”

பாலின சமன்பாடு என்பது ஏற்கனவே எட்டப்பட்டு விட்டது. எட்டப்பட்டு வருகிறது ஆனால் அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் ,வரும் நாட்களிலும்/ வரும் காலத்திலும் எந்த நிலையிலும் அதில் தொய்வு ஏற்படக்கூடாது; நிரந்தரமான , நிலையான பாலின சமன்பாடு என்பது இனி வரும் காலங்களிலும் வரும் தலைமுறைகளிடம் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே நோக்கம்.

பாலின சமத்துவம் இன்று மட்டும் என்று இல்லாமல் வரும் காலங்களிலும் தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மகளிர் தினம் என்பது அனுசரிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது . இந்த ஆண்டு அது குறித்த மாநாடுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அப்படி இருக்கையில், துரதிஷ்டவசமாக ஃபிளிப்கார்ட் போன்ற பிரபலமான இணையதள வர்த்தக நிறுவனம் பெண்களை சமையலறையோடு மட்டும் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கான தள்ளுபடி என்று அறிவித்ததைப் பல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாக அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பி விட்டனர்.

பாலின பாகுபாடு என்று மனம் வருந்தி ஏதோ பெண் என்றாலே சமையலறைக்கு மட்டும்தான் அவள் சொந்தம், சமையலறை மட்டும்தான் அவள் உலகம் என்பது போல எப்படி இதுபோன்ற விளம்பரத்தை கொடுக்கலாம் என்று மக்கள் யாவரும் பொங்கி எழுந்தனர்.

டுவிட்டரில் வைத்துக் கிழித்து விட்டார்கள். பிரபல ஆங்கில தொலைக்காட்சிகளும் வெளிச்சம் போட்டுக் காட்டின.

ஏன் ஆண்கள் கரண்டி பிடிப்பதில்லையா சமையலறையில் அவர்கள் வேலை செய்வது இல்லையா? இது பாலினப்பாகுபாடு இல்லையா? என்றும் பலவிதமான விமர்சனங்களை விவாதங்களைக் கிளப்பிவிட்டது.

செய்த தவறை உணர்ந்து உடனடியாக மண்டியிட்டது ஃபிளிப்கார்ட் வர்த்தக நிறுவனம்.

We are sorry என்று பெரிய அளவில் மன்னிப்புக் கோரினர்.

ஏழாம் தேதி மாலை Flipkart , Flapkart ஆன கதை இதுதான்.

ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.

இந்த நிறுவனமும் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இதுவும் ஒரு வர்த்தக நிறுவனம் தானே.

எல்லா வணிக நிறுவனங்களுமே மார்ச் மாதம் நிதி ஆண்டு முடிவு கிளியரன்ஸ் சேல் போடுவார்கள்.

பழைய ஸ்டாக் எல்லாவற்றையும் அதிகபட்ச தள்ளுபடியுடனாவது விற்று முடித்து விட்டு புதிய நிதி ஆண்டை துவங்குவார்கள் .பண்டிகை காலம் தவிர வருடத்தில் ஒருமுறை இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்பார்கள்.

தள்ளுபடி என்பது எப்போதாவது அறிவிக்கப்பட்ட காலம் முடிந்து இப்போது எப்போதுமே தள்ளுபடி என்று ஆகிவிட்டது.

காதலர் தினம் அன்னையர் தினம் மகளிர் தினம் இப்படி ஏதோ ஒரு தினத்தில் அவர்கள் ஏதோ ஒரு தள்ளுபடியை அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

. சுதந்திர தினம் குடியரசு தினம் என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

ஆன்-லைன் வர்த்தகத்திலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து தள்ளுபடி போட்டுக் கொண்டிருப்பார்கள்.

Flash sale,

lightening sale,

ticktock sale,

crazy sale ,

Deal of the day sale.

Summer sale winter sale autumn sale என்று எதற்கெடுத்தாலும் தள்ளுபடி அறிவித்து போட்டி போட்டுக்கொண்டு வணிகம் நடக்கிறது.

அவ்வளவு ஏன்?

ஒரு விளம்பரத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து பார்த்தால் கூட உங்களுக்கு ஒரு சிறப்பு சலுகை உண்டு.

மக்களை ஈர்ப்பதற்காக அரங்கேற்றப்படும் செயல்பாடுகள்.

குறிப்பாக பொருளாதார நிலையில் மேம்பாட்டை எட்டியுள்ள மகளிரைக் குறிவைத்து விளம்பரங்கள் செய்கிறார்கள். பெண்கள் பாடுபட்டு உழைத்து ஈட்டிய பொருளை செலவழிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.

பாலின சமன்பாடு ஆண்களையும் குறிவைத்து பல விளம்பரங்கள் வருகின்றன.

ஒரு சிறிய விளம்பரம் தான் ,ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் புறந்தள்ளப்படக்கூடாது.

ஒரு காட்டையே அழிக்க வல்லது ஒரு நெருப்புப்பொறி என்பதை மறக்கக்கூடாது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விடம் கூட கலக்கக்கூடாது.

விளம்பரம் செய்யட்டும் .

வியாபாரம் செய்யட்டும். ஆனால் பிற்போக்கு கருத்துகளை சிந்தனைகளை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் விதைக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் கருத்தாக கவலையாக இருக்கிறது.

எந்த ஒரு சிறு காரணம் கொண்டும் முன்னேறி வரும் சமுதாயம் பின்னடைவு காணக்கூடாது.

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...