காயங்கள் ஆறும் முன்னே
கைகொண்டு தேய்க்கலாமோ
கொதிக்கின்ற நீரைக்
குடம் குடமாய் ஊற்றலாமோ
வெந்த புண்ணில்
வேல் கொண்டு பாய்ச்சலாமோ
கன்னத்தின் ஈரம் காய்வதற்குள்
இதழ்களில் முத்தம் இனிப்பதில்லை
ஈரச் சித்திரம் காய்வதற்குள்
தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போகும்..
படைத்தவன் நெஞ்சம் பதறி விடும்
பார்த்தவர் நெஞ்சம் கூடச் சிதறிவிடும்
சம்மதமா சம்மதமா.