ஞாயிறு, 13 ஜூன், 2021

வினோதமான காப்பீடு

 எங்கள் நிறுவனம் காப்பீடு செய்துள்ள சில சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன்னதாக வேறுசில ஆர்வத்தைத் தூண்டும் தகவல்கள்.

மேற்கத்திய நாடுகளில் அழகிய மாடல்கள் திரை நட்சத்திரங்கள் தங்களது அழகான அங்கங்களை காப்பீடு செய்துகொள்வது பழக்கத்தில் உள்ளது.

அதுபோல் தங்களது கண்கள் அழகிய இடை கால்கள் மார்பகங்கள் பின்புறம் என்று தங்கள் அங்கங்களைத் தனித்தனியே பல மில்லியன் கணக்கான டாலர்களுக்குக் காப்புறுதி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கலாம்.

ரோலிங் ஸ்டோன் இசை நிறுவனத்தின் கிட்டார் இசைக்கலைஞர் தனது கைகளை 61.6 மில்லியன் டாலருக்கு காப்புறுதி செய்திருந்தார்.( இன்றைய மதிப்பில் இன்னும் பல மில்லியன்கள்)

நம் நாட்டிலும் இதுபோன்ற காப்புறுதிகள் செய்யப்பட்டுள்ளன.

பாடகர்கள் தங்கள் குரலுக்குக் காப்புறதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா(மிஸ் வேர்ல்ட் 2000) தனது புன்னகையை காப்புறுதி செய்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் அவர்களின் குரல் காப்புறுதி செய்யப்பட்டது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரஜினிகாந்த் அவர்களின் காந்த குரலை அவர் காப்புறுதி செய்திருக்கிறார்.

இந்த மில்லெனியத்தின் துவக்க ஆண்டுகளில் பல இளைஞர்களின் ஹோம் ஸ்கிரீனை ஆக்கிரமித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கைகளை மட்டும் தனியாக இன்ஷ்யூர் செய்துகொண்டார்.

இவை தவிர எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய எங்கள் நிறுவனத்தின் காப்புறுதி ஏற்பாடுகள் பற்றிக் கூறுகிறேன்.

பத்மாவத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகையில் எங்கள் நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 300 கோடி ரூபாய்க்கு படத்தை இன்ஷ்யூர் செய்திருந்தார்கள். மும்பை மண்டல அலுவலகம் II.

படம் வெளிவருவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருந்த போது அதனால் ஏற்பட்ட பண இழப்புகளை கோடிக்கணக்கில் இழப்பீடு செய்ய வேண்டும் என்று எங்கள் சிஎம்டி உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த நிலையில் நல்லவேளையாக படம் ரிலீஸ் செய்யப்பட்டது சின்னதொரு பெயர் மாற்றத்துடன். பல சர்ச்சைகளுக்கு இடையே பத்மாவதி என்பது பத்மாவத் என்று மாற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம். தொலைக்காட்சியில் பார்த்து நாங்களெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம். பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 400 கோடியை எளிதில் தாண்டியது.

ஜாய் ஆலுக்காஸ் மாடல் நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் காப்பீடு இந்த மும்பை மண்டல அலுவலகம் II ல் தான் உள்ளது.

அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை கட்டப்பட்டு வந்த போது அதனை பல கோடிகளுக்கு இன்ஷுர் செய்ததும் இதே நிறுவனம்.(Engineering project )₹2969 கோடி. செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிலை. மும்பை மண்டல அலுவலகம் III

அனைத்து IPL போட்டிகளும் காப்பீடு செய்யப்படுவது நியூ இந்தியாவின் இந்த மும்பை மண்டல அலுவலகம் III ல் தான்.

லாக் டவுனுக்கு முன்னதாக மார்ச் மாதம் 2020 திரையிடப்பட்ட பிரபல திரைப்படம் ஹிந்தி மீடியம் கூட இந்த அலுவலகத்தில் தான் இன்ஷ்யூர் செய்யப்பட்டது.

திரு .ரத்தன் டாட்டா அவர்களால் நிறுவப்பட்ட தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (பிரிமியர் மல்டி நேஷனல்)நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர் 1 இடத்தை வகிக்கிறது.

The body parts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...