யாருடைய வெற்றியைப் பார்த்து அவர்களை விட அதிகம் மகிழ்ச்சி அடைந்தீர்கள் ?
பல பேருடைய வெற்றியைப் பார்த்து அவர்களை விட அதிகம் மகிழ்ந்ததுண்டு.
உறவுகள், சில அலுவலக நட்புகள், சில கல்லூரி நட்புகள், சில அன்பு நெஞ்சங்கள்.
கல்லூரியில்
மாணவர் தேர்தலில் எனது சினேகிதி வெற்றி பெற்று அவள் பெயர் கல்லூரி மாணவர் சேர்மன் என்று அறிவிக்கப்பட்ட போது (கூக்குரலிட்டது நான்தான்)
பிறகு அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆன போது.(செவ்வாய் தோஷம் அது இது என்று பரிகாரங்களை செய்து கொண்டிருந்தாள்)
சில உறவுகள்
எனது நெருங்கிய உறவுகளில் ஒருவர் முதுகெலும்பில் அறுவை சிகிச்சை நடந்த பின் தொற்று;(wound infection) ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஒரு வருடம் கிடந்து தொடர் சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடமாடி குனிந்து வாசலில் கோலமிட்ட போது
இன்னொரு உறவினர் கேன்சரில் இருந்து மீண்டு வந்தவர் இயல்பு நிலைக்கு வந்து அனைத்து பணிகளையும் முன்பு போலவே மேற்கொண்டதைப் பார்த்தபோது
மேடைப் பேச்சாளராகவும் தொழிற்சங்க தலைவராகவும் இருந்த மற்றொரு உறவு, திடீரென்று ஒரு நாள் குரல் பாதிக்கப்பட்டு (stroke)செயலிழந்திருந்த பிறகு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பின் இன்று மீண்டும் மேடையில் மட்டுமின்றி , யூடியூபிலும் ஆன்லைன் வகுப்புகளிலும் என்று அவரது குரல் ஓங்கி ஒலிப்பதைப் பார்க்கும்போது.
அறிமுகங்கள்
பொறுப்பின்றி கிரிக்கெட் விளையாட்டில் கேம்பிலிங் செய்து விளையாடிக்கொண்டு அரியர்ஸ் வைத்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த மகனை என்ன செய்வதென்று தெரியாமல் விட்டு வைத்திருந்த பணிப்பெண் அவனுக்கு ஒரு வேலை தேவை என்று கேட்டபோது அவன் முதலில் படிப்பை முடித்து டிகிரியை கையில் வாங்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதற்கு ஏற்ப அந்தத்தாய் அவனை வழிநடத்தி , அவனது டிகிரி சான்றிதழை ஒரு நாள் என்னிடம் கொண்டுவந்து காட்டியபோது.
அலுவலகத்தில்
தற்காலிக ஊழியர்கள் 30 இளைஞர்கள் இளம் பெண்கள் பல போராட்டங்களுக்கு பிறகு நிரந்தரமான பணிக்கான ஆணை பெற்றபோது.
பொறுப்பாக வேலை செய்த மேலதிகாரிக்கு தவறாமல் அடுத்தடுத்த பதவி உயர்வு வந்த போதும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்த போது கண்கள் கலங்க நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் விடை தந்து வழி அனுப்பிய போதும்.(Fiji கிளைக்கு சென்றார்)
அக்கம் பக்கத்தில்
அண்மையில் அண்டை வீட்டில் கொரோனாவில் இருந்து ஒரு புதுமண தம்பதி மீண்டு வந்த போது
இனி அடுத்தது யாருடைய வெற்றி என்று கேட்டால் என் பதில் தேர்தலில் நான் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் வெற்றி அடையும்போது மகிழ்வேன் என்பதுதான்.
புதுப்பித்தது:
மகிழ்ச்சி அடைந்தேன்.
அண்மையில் ஒருவர் மருத்துவமனையில் கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாமல் இருக்கும் நிலையில் உதவி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவர் எதிர்பார்த்த உதவி கிடைத்தது என்று கேள்விப்பட்டால் மகிழ்வேன்.
22.06.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக