ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

என் குழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியும் ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் படிக்கவில்லை. அவர்கள் தமிழில் எந்த தேர்வும் எழுதியது இல்லை. அவர்களால் 10-வது வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை மட்டும் தொலைதுர கல்வி மூலமாக எழுத முடியுமா?

 



தமிழ்நாட்டில் சில துறைகளில் பணிபுரிய தமிழில் எழுத மற்றும் பேசுவதற்கு தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் .எடுத்துக்காட்டு காவலர் பணி அல்லது சீரருடையாளர் பணி

தமிழ் நாடு திரும்பிய பிறகு இங்கு பணிபுரிய விரும்பினால் அதன் தேவைக்கு ஏற்ப கல்வி முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

தமிழில் மட்.டும் சான்றிதழ் பெறுவதற்கு இன்று தமிழ் இணைய கல்வி கழகம் இருக்கிறது அவர்கள் அளிக்கும் சான்றிதழ் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்கிறது.

ஆங்கிலத்தில் படித்தவர்கள் பலரும் சில குறிப்பிட்ட துறைகளில் பணி புரிவதற்காக தமிழில் தேர்ச்சி பெறுவதற்கு இந்த நிலையத்தை அணுகுவது உண்டு

::தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy::

ஒன்றாம் வகுப்பிலிருந்து உயர் வகுப்புகள் வரை கல்விசான்றிதழ்கள் வழங்கப்படும்.

தமிழை உலகெங்கும் உள்ளவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் எடுக்கப்பட்ட முயற்சி இந்த இணைய வழி கல்வி.


மற்றபடி பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதி பாஸ் செய்வதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தை அணுகவும்.Home - Tamil Nadu Open University

இதில் படித்தால் நேரடியாக பள்ளி படிப்பு பிடிக்காமலே பட்டப்படிப்பு படித்து டிகிரி வாங்கி விடலாம். இளங்கலை மட்டுமின்றி முதுகலை பட்டமும் நேரடியாகப் பெற முடியும்.

மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைதூரக் கல்வியை மிக எளிதில் பெற முடியும்.

என்னுடைய ஆலோசனை ஒரு டிகிரி நேரடியாக வாங்குவதுதான். அங்கே பள்ளி இறுதி படிப்பை முடித்து இருந்தால் அந்த சான்றிதழை வைத்து இங்கே தொலைதூரக் கல்விக்கு அனுமதி பெறமுடியும்.

நேரடியாக பி லிட் படிக்கலாம். எளிதில் பாஸ் செய்து கூடுதலாக ஒரு டிகிரி கையில் வைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...