இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே தலைக் கவசம் அணிய வேண்டும். ஒருவர் மட்டுமே பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கலாம்.பின்னால் அமர்ந்து செல்பவர் குழந்தையாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது சட்டம்.
(சிறுகுழந்தைகளை மடியில் அமர்த்தி வைத்து பயணிக்கும் போது மட்டும் அந்த குழந்தைகளுக்கு ஹெல்மெட் தேவையில்லை).
உண்மையில் கூடுதல் ஆபத்து பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழ்நாடு காவல்துறையின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கவசம் அணியாவிட்டால் கண்டுகொள்வதில்லை என்பதோடு குழந்தைகள் அணியாவிட்டாலும் அதனையும் கண்டுகொள்வதில்லை.
பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது கிளம்பும் மறுப்பு தான் காரணம்.
பின் சீட்டை விடுங்கள் வண்டி ஓட்டுபவரே பல நேரங்களில் ஹெல்மெட்டை சரியாக அணியாமல் சென்று விபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இதோ இது என் கேமராவில் சிக்கியது. கோவை தடாகம் சாலையில்!
மூன்று தலைமுறையினர்
இரண்டு சக்கர வாகனத்தில்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே என்று சென்று கொண்டிருந்தார்கள்.
சிக்னல் தாண்டி செல்கிறோம் என்றால் மட்டும் ஹெல்மெட் அணிவார்கள் மற்றபடி காவல்துறை கண்காணிப்பு இல்லை என்றால் ஹெல்மெட் அணிவதில்லை.
தப்பித்தவறி மாட்டிக் கொண்டாலும் ஏதோ ஒரு சாக்கு சொல்வார்கள். காவல்துறை தான் என்ன செய்ய முடியும்?
- ஹெல்மெட் இருக்கிறது எடுத்து வர மறந்து விட்டேன்.
- ஹெல்மெட் காணாமல் போய்விட்டது
- ஹெல்மெட் போட்டால் தலை வலிக்கிறது
- ஹெல்மெட் அணிந்தால் தலை வியர்க்கிறது.
- ஹெல்மெட் அணிந்தால் தலைமுடி கொட்டிவிட்டது.
- ஹெல்மெட் அணிந்தால் தலையில் infection ஆகிறது.
- 180 டிகிரி பார்வை கிடைப்பதில்லை.
- பின்சீட்டில் இருப்பவன் நண்பன் அவனுக்கு ஒரு உதவியாக தான் அழைத்து செல்கிறேன். இதில் என் தவறு இல்லை.
காவல்துறையினர் எவ்வளவோ முயன்றும் இதை கடுமையாக அமலாக்க முடியவில்லை.
முதலில் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது எல்லாம் ஒரு காரணமாக காட்டப்பட்டது. (ஜிமிக்கி கம்மல் போட முடியவில்லை மாட்டல் போட முடியவில்லை இதெல்லாம் பெண்கள் சொன்னார்களோ இல்லையோ காரணங்கள் முன்வைக்கப்பட்டன.)
உண்மையில் அதிக அளவில் பெண்கள் தான் ஹெல்மெட் அணிந்து பொறுப்புடன் செல்கிறார்கள்.
இந்தப் படம்: shutterstock.com
பாதுகாப்பு உணர்வு என்பது தானாகவே வரவேண்டும். எத்தனையோ விபத்துகளை பார்க்கிறோம். தினமும் தொலைகாட்சியில் பதைபதைக்க வைக்கும் நேரடி காணொளி என்று கண்காணிப்பு கேமரா மூலம் பதிவானதை ஒளிபரப்பி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.
இதற்கெல்லாம் தீர்வாக ஒன்றுமட்டும் கூறலாம்.
பின் சீட்டில் அமர்பவர்களுக்கும் ஒரு ஹெல்மெட் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை பொதுமக்கள் ஞாபகமாக அதை எடுத்துச் செல்ல வேண்டும். வாகனத்தில் பயணிக்கும் போது அதை அணிந்து கொள்ள வேண்டும். அது ஒரு பழக்கமாக வரவேண்டும். குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.
படம்: http://20hotel.com
பெரிய கடைகளில் அலுவலக வாசல்களில் தியேட்டர்களில் ஹெல்மெட்டை சிறிது நேரத்திற்கு வாங்கி வைத்துக்கொண்டு டோக்கன் தந்து உதவலாம்.
இது என்னுடைய முந்தைய பதிவு டிசம்பரில் வெளியிட்டது.
அடிக்குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக