₹2000 நோட்டு என்பதை இரண்டு கண்ணால் பார்த்து இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது .(அவ்வளவு ஏழையோ? இருக்கலாம்). கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகவே அது சர்குலேட் ஆவது குறைந்து தான் போய்விட்டது. 500 ரூபாய் நோட்டு 200 100 50 20 10 இவைதான் பயன்பாட்டில் உள்ளன.
கண்ணைக் கவரும் பஞ்சு மிட்டாய் நிறத்தில் பள பளவென்று வண்ணமயமான இந்த 2000 ரூபாய் நோட்டு. வேற வழியில்லை பை பை சொல்லி விடலாம்.
அதுதான் மின்னணு பண பரிவர்த்தனை நடக்கிறது அப்புறம் எதற்கு நமக்கு ரூபாய் நோட்டு? ரூபாய் நோட்டுகளின் எதிர்காலம் இனி மிகவும் மங்கலாக தான் இருக்கும்(அல்லது நாம் கண்களை மூடிக்கொண்டு விடுவோம்)
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பண்டமாற்று செய்தார்கள் நம் முன்னோர்கள். இப்போது செய்கிறோமா? சிங்க மராட்டியர் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிக்கிறோமா?
நாணயங்களை வைத்துக்கொண்டு
{..ஆயிரம் பொற்காசுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
பிறகு வந்தவை இந்த கரன்சி நோட்டுகள்)
நாணயம் இல்லாமல் கூட வேலை செய்து கொண்டிருந்தோம். சில்லறை தட்டுப்பாடு.
பொருளாதார நெருக்கடிகள் பின்னடைவு என்று எத்தனையோ பார்த்தோம்.
2004 இல் வந்தது சுனாமி அல்ல. 2016 இல் பணமதிப்பிழப்பு வந்ததே அது இந்தியாவை மட்டும் புரட்டிப் போட்டது.
பெரும்பாலும் மின்னணு இணைய வழி பணப்பரிமாற்றம் அதிகமாக செய்யப்படுவதால் 2000 ரூபாய் நோட்டுக்கான தேவையும் குறைந்து விட்டது குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டது. ஏற்கனவே இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இல்லை. விவசாய பெருமக்கள் கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் இவர்கள்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
புழக்கம் குறைந்துவிட்டது
தேவையும் குறைந்து விட்டது.
சில்லறை கிடைப்பதில்லை.
உயர்ந்த மதிப்புள்ள கரன்சி எப்போதுமே விலைவாசி அதிகரிக்க செய்யும்
குறைந்த மதிப்புள்ள நாணயங்கள் அதிகம் பயன்பாட்டில் இருந்தால் பொருள்களின் விலை உயர்வு ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறலாம்.
ஒரு ரூபாயின் மதிப்பு கூட மக்களால் உயர்வாக பார்க்கப்படும்.
பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இதை சிந்தித்துப் பாருங்கள்
அதிக மதிப்பு உள்ள கரன்சி உபயோகிப்பது பெருமை என்று நினைப்பவர்களும் உண்டு. 1997 ல் ₹ 500 எடுத்து நீட்டினாலே பணக்காரன் என்று வியந்து பார்த்தார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு தீபாவளி இனாம் அல்லது திருமணத்திற்கு 500 ரூபாய் பரிசளிப்பதா 2000 பரிசளிப்பதா என்ற கேள்வி எழும்போது நடுவில் ஒரு 1000 இருந்திருக்கலாம் என்று தோன்றும் சூழ்நிலை எப்போதாவது நடுத்தர மக்கள் எல்லோருக்கும் வந்திருக்கும்.
ஒரு சாமானியராக இதை எல்லாம் பார்க்கும் போது அதிக மதிப்புள்ள கரன்சி போய் விடட்டும் என்று தோன்றுகிறது.
ஆனால் 5000 ,10000 ரூபாய் நோட்டு கூட வரும் என்று எதிர்பார்க்கலாம்.
கள்ளப்பணம் வெளியே வருமா பதுக்கல் பேர்வழிகள் தண்டனைக்கு உள்ளாவார்களா?
ஆயிரம் ரூபாயை திரும்ப பெற்று 2000 ரூபாயை அறிமுகப்படுத்தி ஆறு ஆண்டுகள் கழித்து 2000 ரூபாயும் திரும்பப் பெற்று…
கள்ளப் பணத்தை ஒழிக்கும் திட்டம் நிறைவேறி விட்டதா?
லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டதா?
காங்கிரஸ் கட்சி வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார்கள்.
வங்கி ஊழியர் சங்கத் தலைவர் 2016 அச்சடித்த நோட்டுகளில் திரும்பி வராத 4 லட்சம் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
கண்காணிப்பு கேமராக்களை முடக்கி விட்டு செல்போன்களை வெளியே வைத்து விட்டு வரச் சொல்லி தனி அறையில் பேசும் பேரங்கள் எத்தனையோ.
பணக்கார முதலைகள் என்றால் தவறான வழியில் பொருள் ஈட்டலாம். சட்டங்கள் எல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது..
ஒரு வாரம் ஊரில் இருக்க மாட்டேன் ஒரு ரிசார்ட்டில் தங்கப் போகிறேன் என்று கூறினால் என்ன பொருள் தெரியுமா?
அந்த ரிசார்ட்டில் எனக்கு அறை எடுத்துக் கொடுத்து விடு. செலவுகள் எல்லாம் உன்னுடையது.
வீட்டு வாடகையை கூட பணமாகத்தானே பெற்றுக் கொள்கிறார்கள்?
50 ஆயிரத்துக்கு மேல் பணமாகவோ இணைய வழியிலோ செலவழித்தால் வருமான வரி குறியீட்டு எண் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அந்த பரிவர்த்தனை வருமான வரி துறையில் பதிவு செய்யப்படும் என்றும் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அதை நாம் பாராட்டலாம்.
அடிக்கடி கரன்சி நோட்டுகளை மாற்றுவதால் திரும்ப பெறுவதால் எந்த மாதிரியான பலன் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தான் கணித்து சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக