நாடென்ன செய்தது உனக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு எனக் கேட்டால் நன்மை உனக்கு.
நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நன்மை உங்களுக்கு என்று சொன்னவர் ஜான் எஃப் கென்னடி.
அதையே தான் நமது நாட்டு அறிஞர்களும் வழிமொழிந்தார்கள்.
அப்படின்னா அதுல ஏதாவது உண்மை இருக்கும் தானே?
நம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் உன் வாழ்க்கை இதுவும் சிந்தனையாளர்கள் சொன்னதுதான்.
சுனாமியால் அழிவது பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
சுனாமியின் அழிவுகளை நினைத்தாலே நெஞ்சம் கலங்கவில்லையா?
ஆழிப் பேரலைகள் அள்ளிக்கொண்டு போன படபடப்பான காட்சிகள் நினைவுக்கு வரவில்லையா?
அத்தனை மனிதர்களையும் ஒருசேர வாரிக் கொண்டு போனதை நினைத்தால் நெஞ்சம் பதறவில்லையா?
பெற்றோரை இழந்த குழந்தைகள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கணவனை இழந்த மனைவி மனைவியை இழந்த கணவன்
தேடிக்கொண்டு திரிந்த பாவப்பட்ட மனிதர்கள்.
இன்னொரு துயரமா? நினைத்தாலே நடுக்கம் தருகிறதே.
வேண்டாம் அந்தத் துயரம் யாருக்கும் வேண்டாம்.
எல்லாம் சரி தாங்க, பிழைக்க பொருளீட்ட வழிய சொல்லுங்க .Mind voice கேக்குது.
>வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
>ஆழக்கடலும் சோலையாகும்
>ஆசையிருந்தால் நீந்தி வா
>வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
>பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
>பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
>காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....
Find your way , find the right way. NOW!
விரல் பிடித்து நடக்க வைக்க நீங்கள் இன்னும் சிறு குழந்தை இல்லையே. பெற்றோரை எதிர்பார்க்காதீர்கள். சாதியில் எவனாவது கைதூக்கி விடுவான் வேலை வாங்கித் தருவான், தூக்கிக்கொண்டு போய் உயர் பதவியில் உட்கார வைப்பான் என்று எதிர்பார்க்காதீர்கள்.
மேற்கத்திய நாடுகளில் சொந்தமாக சம்பாதிக்கிறார்கள் படிப்புச் செலவை கூட அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். கற்றுக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் இல்லையா எடுத்துக்காட்டுகள்?
வீடு வீடாய் பேப்பர் போட்டவர் தான் தலைவர் அப்துல் கலாம்.
டீ வியாபாரம் செய்ததாக கேலி செய்கிறோமே, அவர் எட்டிய உயரம் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.
எவ்வளவு படித்திருந்தாலும் எந்த வேலையையும் எடுத்து செய்யும் மன உறுதி வேண்டும்.
பாடகர் எஸ்பிபி மறைந்தபோது அவரது கல்லறை குழியில் இறங்கி நின்று இறுதிவரை வேலை செய்தானே ஒரு இளைஞன்.,அவனை உலகம் கவனிக்காமல் போகலாம். அவனுடைய அனுபவம் அவனுடைய நெஞ்சுரம் அவனுக்குக் கடைசிவரை கை கொடுக்கும். ஆம் இடுகாட்டிலும் உங்கள் முத்திரையைப் பதிக்கலாம்.
இதெல்லாம் எழுத நன்றாக இருக்கும் உண்மையில் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்கிறீர்களா?
ஒரு சமூக வலைத்தளத்தில் இப்படித்தான் ஒருவர் புலம்பி இருந்தார்.
GST கட்டி வாழ்க்கையே முடிந்து விடும் போலிருக்கிறது . எங்கு சென்றாலும் வரி எல்லாவற்றிற்கும் வரி. எல்லாமே செலுத்துகிறேன். என் வாழ்க்கைத் தரம் தான் தாழ்ந்து கொண்டே போகிறது பொருளாதாரம் பலவீனம் ஆகிக் கொண்டே போகிறது.
நாட்டுக்கு நான் என் கடமையை செய்கின்றேன். நாடு தான் எனக்கு ஒரு வழி காட்டவில்லை என்றார்.
என்ன? நாடு வழி காட்ட வேண்டுமா?
நாட்டுக்கு வழியை நீங்கள் காட்டுங்கள் ;மக்களை நீங்கள் வழி நடத்துங்கள். கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து குடும்பம் மற்றும் சமுதாய அக்கறையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முன்னேற்றத்தை, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் வைத்திருங்கள்.
தேவை 1.தன்னம்பிக்கை 2.பொறுப்பு.
கடவுளை விடுங்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் போதுமானது. தன்னம்பிக்கையுடன் நீங்கள் நேர் வழியில் சென்றால் இறைவன் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறார் என்று இறை நம்பிக்கை உள்ளவர்கள் கூறுவார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நீங்கள் நிற்கும் உயரத்தைப் பொறுத்து உங்களை அந்த இறைவனாகவே பார்ப்பார்கள்.
நீங்களும் முன்னேறி உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக