வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 12 உலக இளைஞர் தினம்

அனைத்துலக இளைஞர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சமூகத்தின் பல்வேறு கலாச்சார, சட்ட மற்றும் பிற வளர்ச்சி அம்சங்களில் இளைஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை கல்வியின்மை உடல்நலக் குறைவு என்று போராட்டமான வாழ்க்கையை மேற்கொண்டு இருக்கும் நிலையில் அவர்களது மேம்பாட்டுக்காகவே இந்த தினம் அனுசரிக்கப்பட்டு உலகெங்கும் ஆக்கபூர்வமான பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

அதைப் பற்றி அவசியம் ஒவ்வொரு இளைஞனும் அறிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்து படிவத்தின் கீழ் இளைஞர்களின் மீது கவனம் செலுத்த வேண்டிய முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.

இளைஞர்களின் தேவைகள் உணரப்பட வேண்டும்

அவர்களின் திறமைகள் கண்டறியப்பட வேண்டும்

அவர்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்

உலகத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு என்பது கட்டாயம் கிடைக்க வேண்டும்

என்ற உயரிய குறிக்கோளுடன் இந்த தினத்தை பரிந்துரைக்கிறார்கள்.

மக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக பல்வேறு அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார கருத்தரங்கங்கள் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இருப்பினும், உலகம் முழுவதும் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையால், சர்வதேச இளைஞர் தினம் 2021 பெரும்பாலான இடங்களில் இந்த ஆண்டு இந்த தினம், வழக்கம் போல நிகழ்ச்சிகளால் நிறைக்கப் படவில்லை என்றாலும் இந்த நாளைக் கொண்டாட பல வெபினார்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2021 சர்வதேச இளைஞர் தினத்திற்கான தீம் என்ன?

2021 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுவதற்கும் ஒரு தீம் உள்ளது.

Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health ''.

இந்த வருடத்திற்கான கருப்பொருள் "உணவு அமைப்புகளை மாற்றுவது: மனித மற்றும் உலக ஆரோக்கியத்திற்கான இளைஞர் தம் கண்டுபிடிப்பு"

இந்த தீம் COVID-19 தொற்றுநோய், மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் உணவு அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகள் ECOSOC இளைஞர் மன்றம் (EYF) 2021 இல் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, "இளைஞர்கள் பயனாளிகள் மட்டுமல்ல, இன்று இளைஞர்கள் உலகில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர்கள் இன்றியமையாத தலைவர்கள் மற்றும் பங்காளிகள் என்பதை இளைஞர் திட்டம் அதன் வேலையில் வலியுறுத்துகிறது."

Devanshe Pandey:

இளைஞர் தின வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...