விளக்கு ஏற்றுங்கள் ஆனால் அதுக்கு முன்னால ரொம்ப சின்சியரா சானிடைசர் போட்டு கைகளை சுத்தம் எல்லாம் பண்ணிடாதீங்க.
விளக்கு தானே . பரவால்ல. சோப் யூஸ் பண்ணலாம்.
கைகுலுக்கி கட்டிப்பிடித்து தீபாவளி கொண்டாட தேவையில்லை. நம் பண்பாட்டில் இல்லாத செயல்கள் இந்த நேரத்தில் வேண்டாமே. (வைரஸ் ஒழிந்ததும் என்ன வேணா பண்ணுங்க)
வெடி எல்லாம் மறந்திடுங்க. யாராவது போட்டால் போடட்டும். சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க நம்மால் ஆனது செய்வோமே.
மாஸ்க் போடாம வேடிக்கை கூட பாக்காதீங்க.
மாஸ்க் போடாம வெளியே வரக்கூடாது.
முக்கியமா பெரியவங்க வீட்டிலேயும் மாஸ்க் போட்டுக்கோங்க. அந்த பட்டாசு ஸ்மெல் உங்களுக்கு வேண்டாமே.
நுரையீரல் பாதிப்பு வருமாம்.
கொரானா வந்து ஹாய் சொல்லிட்டு போயிருந்தால் நீங்களும் எங்கிருந்தாலும் மாஸ்க் அணியுங்கள்.
வீடுகளில் அழகாக தீபமேற்றி ஆடல் பாடல் பிடித்த உணவு திரைப்படம் என்று மகிழ்ந்து கொண்டாடுங்கள். சிரிக்க மறக்காதீர்கள்.
அன்பை பகிருங்கள். ஆண்டவனை வேண்டுங்கள். ஒளிமயமான எதிர்காலத்திற்காக இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக