ஆங்காங்கே உள்ள அனைத்து தீவிர பிரச்சினைகளும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. முழுமையாகக் கட்டுப் படுத்தப் பட்டு விட்டன என்று கூற முடியாது.
சில பிரச்சினைகள் வழக்கு மன்றங்களில் ஊறிக் கொண்டிருக்கின்றன அல்லது ஊற வைக்கப்பட்டிருக்கின்றன.
பல காலமாக இருந்து வந்த அயோத்தி பிரச்சினை முடிவுக்கு வந்தது.
விவசாயி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.ஏன் எதற்காக என்பதெல்லாம் அனைவரும் அறிந்தது.
அவ்வப்போது வெடிக்கும் உள்நாட்டு பிரச்சினைகள் எல்லாம் சில காலம் கழித்தாவது சுமுகமாக தீர்த்து வைக்கப்படுகிறது.
இவையெல்லாம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன வா என்றால் அதற்கு காலம் தான் பதில் சொல்ல முடியும்.
எந்தப் பிரச்சினையும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தலை தூக்கலாம்.
கொதிக்கும் பாலில் தண்ணீர் தெளித்து எவ்வளவு நேரம் பொங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்?
பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இப்போதைக்கு நாட்டில் அன்றாடப் பிரச்சினைகள் மட்டுமே இருக்கின்றன.
விலை உயர்வு விலைவாசி பொருளாதார வீழ்ச்சி என்று ஏற்கனவே இருந்து வந்த பிரச்சினைகள் பெருந்தொடற்றுக்குப் பிறகு அதிகரித்து விட்டன. இது உலகெங்கும் நிலவும் ஒரு நிலைதான்.
மற்றபடி நிரந்தரமான பிரச்சினைகள் என்று பார்த்தால்
- நாட்டின் கல்வி என்பது எப்போதுமே விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் ஒன்று.
- ஏழ்மை வேலையில்லா திண்டாட்டம் , சுத்தம் சுகாதாரம் உடல் நல கோளாறுகள் என்பவை மக்களை எப்போதுமே பாதித்து வந்திருக்கின்றன.
- பெண்களுக்கான பாதுகாப்பு என்பது நாட்டில் எப்போதுமே சவாலான ஒன்றாக இருப்பது வேதனைக்குரியது.
- வேளாண்மை என்பது என்றுமே சவால்களை சந்திக்கும் ஒரு துறையாகவே இருக்கிறது.
- சுற்றுச்சூழல் மாசு அவ்வப்போது அதிகரித்து வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒன்று.
- வெளிநாடுகளுக்கு இந்திய மார்க்கெட்டை திறந்துவிடும் நிலைமை தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஏற்றுமதிக் கொள்கை அவ்வாறு இருக்கிறது. மென்பொருள் போன்ற துறைகளுக்கு தேவையான இறக்குமதிப் பொருள்களின் விலை அதிகரிப்பது போன்றவை கவலைக்குரியவை. வளர்ந்துவரும் நாட்டுக்கு முட்டுக்கட்டைகள்.
- இந்தியாவும் ஒரு சூப்பர் பவர் நாடு ஆக வேண்டும் என்றால் இவை அனைத்தையும் தாண்டி வர வேண்டும்.
வெளிநாட்டுத் தொடர்புகளை பொருத்தவரை உக்ரைன் ரஷ்யா போரில் நடுநிலைமை.
ரஷ்யாவை பகைத்துக் கொள்ள முடியாத நிலைமை.
அமெரிக்காவுடன் ஆன தொடர்புகளை உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
நடுநிலைமை வகிக்க வேண்டிய கட்டாயம். இதில் ஒன்றும் யாருடைய டிப்ளமேஸி திறமை எல்லாம் கிடையாது.
நாட்டின் உயர் பதவியிலிருக்கும் யாரொருவரும் இதைப்போன்ற முடிவைத்தான் எடுக்க வேண்டியிருக்கும்.
வேண்டுமானால் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்று கூறிக் கொண்டு நடுவில் கட்டை பஞ்சாயத்து செய்யலாம்.
உண்மை என்னவென்றால் அச்சம் பாதிப்புகள் குறித்த கவலை இவைதாம்.
இரு வீட்டுக்காரர்கள் சண்டை போட்டுக்கொண்டால் உள்ளே இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் கோழைத்தனம் நமக்கேன் வம்பு என்ற மனப்பான்மை என்று கூட சொல்லலாம்.
ரஷ்யாவின் மீது காலம் காலமாக இருந்து வரும் தேவையற்ற அச்சம் மற்றும் சார்புத்தன்மை. இதையெல்லாம் இனிமேல் இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
பிப்ரவரி 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக