புதன், 6 ஏப்ரல், 2022

அனைத்து ATM கார்டுகளுக்கும் காப்பீடு இருக்கிறதா? அதன் உரிமையாளருக்கு மரணம் ஏற்பட்டால் காப்பீடு இழப்பு கோரலாமா? விவரங்கள் கூறவும்?

நமது ATM கார்டுகளுக்கு அனேகமாக அனைத்து வங்கிகளுமே 50 ஆயிரத்திலிருந்து 10 லட்சம் வரை விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கும் விபத்தினால் ஏற்படக்கூடிய மருத்துவச் செலவுகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன.

டெபிட் கார்டுகளுக்கு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் வழங்குகின்றன.

இவை அனைத்தும் வங்கிகளுடன் காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து வழங்கிவருகின்றன.

மற்றபடி இயற்கை மரணங்களுக்கும், Covid19 காரணமாக ஏற்படும் மரணங்களுக்கும் இழப்பீடு அரசின் குறிப்பிட்ட சில திட்டங்களில் இணைந்து இருந்தால் கிடைக்கும்.

வங்கிகள் மூலமாக அரசு வழங்கும் திட்டங்கள்

2015 ஆம் ஆண்டில், அனைத்து வங்கிகளின் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்துடன் இரண்டு காப்பீட்டு திட்டங்களை இந்திய அரசு வழங்கியது:

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) ரூ .330 * மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா * (PMSBY) ரூ .12 .

2 லட்சம் ரூபாய் காப்பீட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.


18–50 வயதுள்ளவர்கள் ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்திருந்தால், விபத்தில் மட்டுமல்லாது எந்த ஒரு காரணத்தினால் ஏற்படும் மரணத்திற்கும் இழப்பீடு பெறலாம்.₹200000/- .

18–70 வயதுள்ளவர்கள் சுரக்ஷா பீமா திட்டத்தில் இணைந்திருந்தால் விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கும் அல்லது நிரந்தரமாக முழுமையாக செயலிழப்பது மற்றும் நிரந்தரமாக பகுதி செயலிழப்பு (partial disability)போன்றவற்றிற்கும் முறையே இரண்டு லட்சம், ஒரு லட்சம் இழப்பீடு பெறலாம்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரர்கள் அவரது வங்கி கணக்கு புத்தகம் வங்கிக்கு எடுத்துச்சென்று அவரது கணக்கில் பிரீமியம் தொகை₹330 /₹12 பிடிக்கப்பட்டு இருந்தால்(மே மாதத்தில்) வங்கியாளர்கள் இன் வழிகாட்டுதலின்படி அந்த இழப்பீட்டுத் தொகைக்கு உரிமை கோரலாம்.

பலரும் இந்தத் திட்டங்களின் கீழ் உரிமை கோராமல் விட்டு விடுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். முடிந்தவரை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana(PMJJBY)

Pradhan Mantri Suraksha Bima Yojana(PMSBY)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...