ஆயிரமாயிரம் திரைச்சீலைகளால் பயனில்லை
வண்ண வண்ணக் குடைகள் ஒரு போதும் வெம்மை தணிப்பதில்லை.
குளிர் சாதனங்களால் கேடுண்டு, பயனில்லை.
கோடி மரங்கள் வெட்டி சில ஆயிரம் நட்டு விட்டு-
என்று தணியும் இந்த வெம்மையின் தாக்கம் என்று விம்மியது மண்ணுலகு
சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை மறுத்தது என் பூவுலகு.
மனம் வெதும்பி திருப்பி அனுப்பியது கதிர்வீச்சு
எல்லா வெப்பமும் வேண்டாமென்றால் நீ செவ்வாய் போல் உறைந்து போவாயே என் மண்ணுலகே.
பசுமை இல்லமென செயல்படுவேன் என்றென்றும் உனக்காக-
உறைய வைக்கும் பனி வேண்டாம்
உயிர் மாய்க்கும் வெம்மை வேண்டாம்
எனவே தான்
ஓஸோன் நானும் சற்றே சிதைந்து விட்ட போதும்
சுட்டெரிக்கும் வெம்மை தந்த
வெளிச்சம் தடுத்து நிழலாக
மாறினேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக