சனி, 14 மே, 2022

எல்.ஐ.சி தனது ஐ.பி.ஓ-வில் பத்து சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கியுள்ளது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள இவர்களின் வியாபார உத்தி என்ன? என்ற கேள்விக்கு எனது பதில்

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை ஒதுக்கீடு செய்வது பற்றிய கேள்வி.

இது மாதிரி ஒதுக்கீடு செய்வது எதற்காக என்பதை முதலில் பார்க்கலாம்.

இதில் வியாபார உத்தி புதிதாக எதுவும் கிடையாது. இது வழக்கமான செயல்முறை தான்.

எந்த ஒரு நிறுவனமும் தனது பங்குகளை வெளியிடும் போது முக்கியமான முதலீட்டாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ரீடெய்ல் வணிகம் செய்வோருக்கும் முதலில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி விடுவார்கள்.

கூடுதல் தகவலாக சற்று தள்ளுபடி கொடுத்தே இந்த பங்குகள் அவர்களுக்கு விற்கப்படும்.

மேலும் பொதுமக்களுக்கு பங்குகள் வழங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னதாகவே இவர்களுக்கு பங்குகள் விநியோகிக்கப்படும்.

இவ்வாறு முன்னுரிமை கொடுப்பதும் தள்ளுபடி உள்ளிட்ட பிற சலுகைகள் கொடுப்பதும் வழக்கமான ஒன்று.

இவ்வாறு செய்வதன் மூலம் கணிசமான ஒரு தொகையை அவர்கள் பங்குதாரர்களிடம் இருந்து உறுதியாக திரட்டி விட முடியும்.

அதைத்தான் எல்ஐசி செய்திருக்கிறார்கள்.

ஒருபடி அதிகமாக சென்று இரண்டு லட்சத்துக்கும் மேல் பாலிசி வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள் . வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்கள் தான்.(எனவே இது ஒரு நல்ல நடவடிக்கை Good business policy என்பது எனது தனிப்பட்ட கருத்து)

இதற்கு முன்பு எங்கள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் பங்குகளை 2017 இல் வெளியிட்டபோது ரூபாய் 800 க்கு பொதுமக்களுக்கும், அதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட சதவீதத்தை ரூபாய் 760 க்கு ஊழியர்களுக்கும் வழங்கியது.

LIC யின் பங்குகள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்

ஆரம்ப பொது வழங்கல் (Initial Public Offering) ஒவ்வொன்றும் ரூ. 902-949 க்கு இடையில் இருக்கும் (lots or multiples of 15) 15 மடங்குகளில் கிடைக்கும். ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு முறையே 0.7% மற்றும் 10% ஐ ஒதுக்கியுள்ளார்கள். இந்த இரண்டு வகைகளிலும் சேர்த்து, சில்லறை முதலீட்டாளர்களுக்கு 31% ஒதுக்கப்பட்டுள்ளது

India's largest life insurer has reserved 55% of the total issue size of 22.14 crore for policyholders, employees, non-institutional and retail investors, according to its red herring prospectus.

The government is looking to raise over Rs 21,000 crore from a 3.5% stake sale in LIC


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...