ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் பெரும்பாலும் அனைவரும் அறிந்தவையாகவும் எல்லோரும் விரும்பும் விதத்தில் அமைந்து உலகப் புகழ் பெற்றவையும் அவர் எழுதி அரங்கேற்றிய நாடகங்கள் தாம்.
அவை தவிர எனக்குப் பிடித்தவை குறைந்த அளவில் அவர் எழுதிய கவிதை படைப்புகள்.
இலக்கியம் பயின்றவர்களைத் தவிர வெகு சிலரே கேள்விப்பட்டிருக்கலாம். 14 வரிகளில் எழுதப்பட்ட Sonnets- ல் நான் மயங்கிய போது எனது வயது 18. சில வருடங்கள் கழித்து அவற்றைத் தேடிப்பிடித்து ஒன்றே ஒன்றை மனப்பாடம் செய்து ஆழ்மனதில் ஒருவருக்கும் தெரியாமல் புதைத்து வைத்துக்கொண்டேன். கம்பனைப்போல காதலின் மகத்துவம் உணர்த்தும் படைப்பு.
ஆத்மார்த்தமான காதலையும் யதார்த்தமான உடல் ரீதியிலான உணர்வையும் இரு பிரிவுகளாகக் கூறிய பாடல்கள் இன்றளவும் பல்வேறு கோணங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டாடப்படுபவை.
இன்பியல் நாடகங்களைப் பொருத்தவரை As you like it
மரங்களின் ஊடே என்னைத் தாலாட்ட வருவாளா என்று பாடிக்கொண்டு வரும் திரைக் கதாநாயகன் கூட ஏனோ எனக்கு இதைத்தான் நினைவு படுத்துவார்.
துன்பியல் நாடகங்களைப் பொருத்தவரை
Othello -அந்தக் கருப்பு வீரனை வியந்து, பயந்து பார்த்து, பிறகு அவனது அழகிய காதலியை அவனுடன் சேர்ந்து இரசித்து, அவனது அன்பின் ஆழம் கண்டு பிரமித்து, அது துன்பத்தில் முடிந்த போதும் அவனை வெறுக்க முடியாமல் விரும்பவும் முடியாமல் இரக்கம் மேலிடத் திணறிய அனுபவம்.
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பின்னணியும் விரிவுரையும் உண்டு.
If you know Tamil, please post your response.
பதிலளிநீக்கு